இலண்டனில் தொடர் உண்ணாவிரதம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 ஆகஸ்ட் 2012 16:28
கிழக்கு இலண்டன் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகாமையில் சிவந்தன் என்னும் தமிழர் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.
கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
1. தொடர் இனஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதைத் தடைசெய்ய வேண்டும்
2. ஐநா ஆணைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும்.
3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நில ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும்.
5. தொடர் இன ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களைத் திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.
சிவந்தன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.