அறவாணர் விருது வழங்கும் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012 11:49
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த தமிழறிஞருமான முனைவர் அறவாணன் அவர்கள் பெயரால் அமைக்கப்பட்டுள்ள
ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளில் அறவாணர் சாதனை விருது அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு அவ்விருது உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் இயக்குநர் இரா. முத்துக்குமாரசாமி, கனடாவில் உள்ள தமிழர் மரபுக் கழகத்தின் தலைவர் சு. இராசரத்தினம் ஆகியோருக்கு வழங்கும் விழா ஆகஸ்ட் 4ஆம் தேதி இலயோலா கல்லூரியில் நடைபெற்றது.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேரா. மு. பொன்னவைக்கோ விழாவிற்குத் தலைமை தாங்கினார். விருது பெற்ற மூவருக்கும் பேரா. க.ப. அறவாணன் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
விருதோடு அளிக்கப்பட்ட ரூ.10,000/-ஐ பழ. நெடுமாறன்-சு. இராசரத்தினம் ஆகியோர் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற நிதிக்காக வழங்கினர். முத்துக்குமாரசாமிக்கு அளிக்கப்பட்ட பணத்தை புலவர் கி.த. பச்சையப்பன் அவர்களுக்கு அவர் வழங்கினார். அதில் 5,000 ரூபாயை கி.த. பச்சையப்பன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிதிக்காக அளித்தார்.
பழ. நெடுமாறன், இரா. முத்துக்குமாரசாமி, சு. இராசரத்தினம் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.
காலை 10 மணிக்கு நூல் வெளியீட்டரங்கம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயற்குழுவின் தலைவர் சிலம்பு நா. செல்வராசு, செயலாளர் இரா. அறவேந்தன், ஒருங்கிணைப்பாளர் சு. தமிழ்வேலு, பொருளாளர் இரா. கெளதம் சங்கர் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.