ஒப்புதல் வாக்குமூலம்? - பேராசிரியர் அ. அய்யாசாமி PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012 12:08
28-7-2012 தேதியிட்ட "இந்து' ஆங்கில இதழில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கர்னல் ஆர். ஹரிகரன் என்பவர் 1971-ல் நடைபெற்ற "பங்களாதேஷ்' போரிலும்
1987-90இல் சிறீலங்காவிலும் இந்திய இராணுவம் ஈடுபட்ட நிகழ்வுகளைப் பற்றிய கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். "இரு குறுக்கீடுகளின்' கதை (A Tale of Two Interventions) என்று தலைப்பிட்டு அவர் எழுதியிருந்தாலும் இந்திய அமைதிப் படை இலங்கைக்குச் சென்ற வரலாறுதான் அது. 29-7-2012 அன்று அமைதிப் படை என்று பெயரிடப்பட்ட அட்டூழியப் படை சிறீலங்காவுக்குச் செல்வதற்கு வித்திட்ட ராசீவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத் தாகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவுறுவதை முன்னிட்டு, அந்த இரண்டு "குறுக்கீடு'களிலும் பங்கு வகித்த அவர் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
சிறப்பான திட்டமிடுதலுக்கும் போர் புரிவதற்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜெனரல் மனேக்ஷா வுக்கும் புகழ் சேர்த்த நிகழ்வு என்று இந்திய-கிழக்குப் பாகிஸ்தான் போரைப் பற்றிக் குறிப்பிடும் ஹரிகரன் அதன் வெற்றிக்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார். முதலாவது இரும்பு மங்கை இந்திராகாந்தியின் தலைமை. அவருக்கு மக்களிடையில் இருந்த அளவிறந்த செல்வாக்கு. அத்துடன் அவர் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ப வரும்கூட. இராணுவத்தைப் போருக்கு ஆயத்தம் செய்வதற்கான கால அவ காசம் வேண்டும் என்று மனேக்ஷா கேட்டபோது போருக்கான தேதியை அவர் தள்ளி வைத்தார். போருக்குப் புறப்படுவதற்குமுன் பன்னாட்டு ஆதரவைத் திரட்டினார். அமெரிக் காவோ சீனாவோ உள்ளே நுழைந்து விடாமல் அரண் செய்துகொள்வ தற்காக சோவியத் நாட்டுடன் நட்புறவு உடன்படிக்கை செய்துகொண்டார்.
அவருக்குப் பிறகு நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ராசீவ்காந்தியோ? அவரை ஒரு அரசியல் வெகுளி Politically naive) என்று குறிப்பிடுகிறார் ஹரிகரன். அனுபவம் பெறப் பெற அவர் அவசரக் குடுக்கையாக மாறிவிட்டார். முதிர்ந்த தலைவரான பி.வி. நரசிம்மராவ் ஒப்பந்தம் வேண்டாம் என்று கூறிய அறிவுரையை அவர் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை.
ராசீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக சிறீலங்காவுக்குச் சென்ற இந்திய இராணுவம் எதிர்பாராதவிதமாக விடு தலைப் புலிகளுடன் போர் புரிய வேண்டி நேர்ந்தது. அதன் காரணமாக இந்திய போர் வீரர்கள் 1255 பேரும் இலங்கையில் ஆயிரக்கணக்கா னோரும் உயிரிழந்தனர் என்று சொல்லும் ஹரிகரன் அதற்கான காரணத்தைப் பின்னர் விளக்குகிறார்.
1987 ஆகஸ்ட் திங்கள் அவர் சிறீலங்காவில் கால் வைத்தவுடன் ஜெயவர்த்தனே இந்தியப் படைகளை விடுதலைப் புலிகளுடன் மோதவிட இருக்கிறார் என்று விஷயம் அறிந்த வர்கள் கூறினார்கள். தாம் அதை முதலில் நம்மாவிட்டாலும் காலம் அதுவே உண்மை என்று உணர்த்திய தாக ஒப்புக் கொள்கிறார் அவர். அத்துடன் இந்தியாவால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளை ராசீவ்காந்தி வாய் வார்த்தையாக வாரி இறைத்தார் என்னும் உண்மையையும் தெரிவிக் கிறார். அடுத்து இலங்கை அதிபராகப் பதவிக்கு வந்த பிரேமதாசா இந்திய இராணுவத்தை வெளியேற்றியபோது ராசீவ் காந்தியால் அதனை எதிர்த்து எதுவும் செய்ய இயலவில்லை. அதற்கான உபாயம் எதுவும் (டப்ஹய் இ) அவரிடம் இல்லை.
மேலும் சிறீலங்காவில் எதற்கா கப் போர் புரியப் போகிறோம் என்ற இலக்கு எதுவும் வகுக்கப்படவில்லை. அதன் விளைவாக ராணுவத்தின் சிந்தனையே குழம்பிப் போயிற்று. ராணுவத்தினரைக் கேட்காமலே போர் உத்திகளையும் உபாயங்களையும் முடிவு செய்த காரணத்தால் சிறீலங்கா வில் இந்தியப் படை எய்திய இழப்புகள் அர்த்தமற்றவையாகிவிட்டன என்கிறார் ஹரிகரன். அத்தோடு உளவுத்துறையும் தேவையான தகவல்களை இராணுவத் திற்கு அளிக்கவில்லை.
இருந்தபோதிலும் ராசீவ்-ஜெய வர்த்தனே ஒப்பந்தத்தால் ஒரு நன்மை ஏற்படத்தான் செய்தது என்பது அவர் கருத்து. இலங்கைத் தீவின் சிறுபாண் மைத் தமிழர்களின் நலனில் இந்தியா அக்கறை கொண்டிருந்தது. அதன் விளைவாகத்தான் இலங்கை அரசமைப் புச் சட்டத்திற்கு 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டு, தமிழருக்கான மாநிலங்கள் உருவாக்கப்பட்டு அவற் றிற்கு ஓரளவு அதிகாரங்களும் வழங் கப்பட்டன என்கிறார் அவர்.
ஆனால் அடுத்த வரியிலேயே ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் கழிந்த பின்னரும் 2009இல் நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும்கூட, சிறீலங்கா அரசு தன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் தெரிவிக்கிறார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது ஒன்றே ஒன்றுதான். வஞ்ச கத்திலும் சூழ்ச்சியிலும் கைதேர்ந்த ஜெயவர்த்தனே தன்னுடைய தந்திரச் செயல்களுக்கு ராசீவ் காந்தியைப் பகடைக் காயாக்கிக் கொண்டுவிட்டார். இந்தியாவின் முகத்தில் ஓர் அங்குலம் கரியைப் பூசி விட்டார் என்பதுதான் அது. அத்துடன் நிற்கவில்லை. சூழ்ச்சி யிலும் பொய்மையிலும் அவருக்கு சற்றும் சளைக்காத மகிந்த இராசபக்சே இன்றைய ஆட்சியாளர்களையும் அதே மாதிரி பயன்படுத்திக் கொண்டு விட்டார்.
அது மட்டுமா? வேண்டிய அளவு ராணுவ உதவிகளைப் பெற்று, அதைக் கொண்டு தான் நினைத்ததை முடித்த பிறகு இந்தியாவைத் துச்சமாகத் தூக்கியெறியவும் அவர் தயங்க வில்லை. அவரது அமைச்சர்களையும் குட்டித் தேவதைகளையும் உசுப்பி விட்டு இந்தியத் தலைவர்களை வாயில் வந்தபடி வசைபாட வைக் கிறார். பத்திரிகைகளில் மனம் போனபடி எழுத வைக்கிறார். கபடச் சிரிப்போடு அவர் தந்த ஒரு சில வாக்குறுதி களைக்கூட நிறைவேற்றும் எண்ணம் அவரிடம் ஒரு சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை நாம் ஆட்சி யாளர்கள் எவ்வளவு பெரிய அவமான மாக எடுத்துக்கொள்ள வேண்டும்!
தெளிவான பார்வையுடன் வரலாற்று நிகழ்வுகளைக் கவனிப்ப வர்களுக்கு இந்த உண்மைகள் புலப் படாமல் போகாது. அப்படி இருந்தும் அன்று முதல் இன்றுவரை நமது ஆட்சியாளர்கள் வினோதமான முறையில், யதார்த்தத்திற்குச் சற்றும் பொருந்தாத வகையில், நடந்து கொள் வதற்கு எது காரணம்? யார் காரணம்?
நல்லெண்ணம்கொண்ட சிந்தனையாளர்கள் இந்தக் கேள்விக்கு விடை கண்டாக வேண்டும். நாட்டிற் குப் பெருமை சேர்க்கும் வகைகளில் நடந்துகொள்ளுமாறு நம் தலைமைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இது அவர்களின் கடமை. இதில் அவர்கள் வழுவினால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.