ஆவடி மனோகரன் நினைவேந்தல்... குடும்ப நல நிதியளிப்புக் கூட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012 12:12
தமிழர் தன்மானப் பாசறையின் நிறுவனர் ஆவடி மனோகரன் நினைவேந்தல் நிகழ்வும் அவர்தம் குடும்ப நல நிதியளிப்புக் கூட்டமும் ஆவடி பெருநகராட்சித் திடலில் 03-08-12 அன்று இனிதே நடந்தேறியது.
வீ. அய்யாத்துரை அவர்கள் தலைமையில் நடந்த நிதியளிப்புக் கூட்டத்திற்கு செ.ப. முத்தமிழ்மணியும் இரா. அந்திரிதாசும் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் புலவர் கி.த. பச்சையப்பன், திருநாவுக்கரசு,
அ. பத்மநாபன், இரா. செங்குட்டுவன், கோ. முருகேசன், வழக்கறிஞர்கள் பா. குப்பன், கெ. கணேசன் மற்றும் முல்லை. தமிழன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். (அ. இனாயத்துல்லா நன்றி கூறினார்).
நிதிக்குழுவின் சார்பில் திரட்டப்பட்ட தொகை உரு.6,10,000த்தை மனோகரனின் அன்புத் துணைவியார் திருவாட்டி சகுந்தலா மனோகரனிடம் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்களும் ம.தி.மு.க.வின். பொதுச்செயலாளர்
திரு. வைகோ அவர்களும் இணைந்து வழங்கினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் ஐயா. பழ. நெடுமாறன் அவர்களும் திரு. வைகோ அவர்களும் நினைவேந்தல் உரை நிகழ்த்தி கூட்டத்தை நிறைவு செய்தனர்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.