பாவாணர் கோட்டத்தினர் நடத்திய மறைமலையடிகளார் பிறந்தநாள் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 செப்டம்பர் 2012 14:29
சீயோன்மலை-முரம்பில் தி.ஆ.2043-ஆடவை 31இல் 15-7-12 அன்று மறைமலையடிகளார் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தலைமையுரையை அ. இளங்கண்ணனும், வரவேற்புரையை, சா. மனவழகனும், செயல்பாட்டுரையை எ. அரசகுருவும், அறிமுகவுரையை ஆ. நெடுஞ்சேரலாதனும், தொகுப்புரையை இல. நிலவழகனும் ஆற்றினர். மாலை, மதுரை சாகுல் அமீது பாவாணரின் பத்துப் பாடல்களை இசையமைத்துத் தமிழிசை வழங்கினார். "பாவாணர் கோட்டப் பாதுகாவலர்' சிங்கப்பூர் கரு.வெ. கோவலங்கண்ணனார் ஒளிப்படத்தைத் தமிழிசை அறிஞர் மதுரை நா. மம்மது திறந்து வைத்து புகழுரையாற்றினார். பாவாணர் கோட்ட வளர்ச்சிக்கு வைப்புப் பணம் உரு. 25,000/வழங்கிய பேராசிரியர், தமிழியக்கத் தலைவர் இரா. இளவரசு-வேலம்மாள் குடும்பத்தைத் தமிழாசிரியர் ஆ. நெடுஞ்சேரலாதன் அறிமுகம் செய்து பேசினார். மேலைச்சிவபுரி கணேசர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் தா. மணி அவர்கள் மறைமலையடிகளின் மகள் மூலமும் வள்ளலார் பாடல் மூலம் தனித்தமிழ் இயக்கம் கண்டதையும், தமிழர் சமயம் சார்ந்து தொண்டாற்றியதையும், வள்ளலார் கொள்கைகள் தமிழியத்தை வளர்த்தெடுக்கப் பயன்பட்டதையும் சான்றுகளுடன் பேசினார். ஒரே காலகட்டத்தில் தோன்றிய தமிழியக்கம் கொள்கை வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட என்னென்ன கரணியம் என்பதைப் பற்றியும், மாற்று இயக்கத்தினர் ஆட்சியில் இடம்பெற என்னென்ன கரணியம் என்பதையும் மொழியின வரலாற்று ஆய்வுரை செய்து, எதிர்காலத்தில் தமிழின ஓர்மை ஏற்பட வழிவகை கூறி விழாச் சிறப்புரையை நிறைவு செய்தார். பள்ளி மாணவ- மாணவிகளுக்குப் பரிசளிப்பு நடந்தது. இறுதியில் மு. உலகநாயகன் நன்றி கூறினார்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.