பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் - நூல் அறிமுக விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012 15:01
திருவாரூர்
"பிரபாகரன் -தமிழர் எழுச்சியின் வடிவம்'' நூல் அறிமுக விழா திருவாரூர் யு.பி. திருமண மண்டபத்தில் 5-10-12 அன்று மாலை நடைபெற்றது.
புலவர் ப. சண்முகவடிவேல் அவர்கள் இவ்விழாவிற்குத் தலைமை தாங்கினார். க. மணியன் வரவேற்புரை நிகழ்த்தினார். ரயில் பாஸ்கர், தென்றல் சந்திரசேகர், ம.அ. முப்பால், புலவர் எண்கண் சா. மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி இந்திரஜித்து நூல் அறிமுக உரையாற்றினார். சி. முருகேசன்,
க. பரந்தாமன், ப. சீனிவாசன், பி.எஸ். மாசிலாமணி, ச. தமிழ்வேந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். வெ. பால்ராசு அனைவருக்கும் நன்றி கூறினார்.
பட்டுக்கோட்டை
6-10-12 அன்று பட்டுக்கோட்டை இலட்சுமி பிரியா திருமண மண்டபத்தில் நூல் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. வெ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். க. அர்சுனன் அனைவரையும் வரவேற்றார்.
பழ. சக்திவேல், இரா. காமராசு, ச. திருமுருகன், ஆர். நீலங்கண்டன்,
சித. திருவேங்கடம், இரா.சுகந்தன், வீ. கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
துரை. பாலகிருட்டிணன் நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.
இரா. திருஞானம், மரு. மு. செல்லப்பன், பிச்சினிக்காடு இளங்கோ,
இரா. பிரகாசம்,சி. முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர்
த. செயராமன் நூல் அறிமுக உரை ஆற்றினார். கவிஞர் ஞானதிரவியம்,
நா. வைகறை ஆகியோர் திறனாய்வு உரை நிகழ்த்தினர். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். நா. பஞ்சு அனைவருக்கும் நன்றி கூறினார்.
மயிலாடுதுறை
7-10-12 அன்று மயிலாடுதுறை வாழ்க்கை திருமணக் கூடத்தில் நூல் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது. இரா. முரளிதரன் தலைமை தாங்கினார். நாக. இரகுபதி அனைவரையும் வரவேற்றார்.
முனைவர் த. செயராமன் நூல் அறிமுக உரையாற்றினார். சி. மகேந்திரன் சிறப்புரை நிகழ்த்தினார், இரெ. இடும்பையன், தங்க அய்யாச்சாமி, என்.எஸ். அழகிரி, ஏ.எஸ். மோகன், மு.பி. கதிர்வளவன், சி. இளந்தமிழன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
ம. இளையராசா, இரா. இளங்கோவன், செ. முரளி, சுப்பு மகேசு,
பா. பெரியார்செல்வம், ஒய்.எஸ். சர்புதின், இரா. சுரேஷ்குமார், ஜெ. சங்கர், எழிலன், என்.எஸ். இராசேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கா. பரந்தாமன் சிறப்புரையாற்றினார். பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். கவிஞர். பூபதி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.