தமிழறிஞர் இறைக்குருவனார் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 15 டிசம்பர் 2012 14:11
சிறந்த தமிழறிஞரும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது மூத்த மருமகனும் ஆன புலவர் இறைக்குருவனார் அவர்கள் திடீரென காலமான செய்தி மிகவும் அதிர்ச்சியை அளித்தது. அதற்கு முந்திய வாரம்தான் நாங்கள் சந்தித்து உரையாடி மகிழ்ந்தோம்.
ஆனால் அதற்குள் அவர் நம்மிடமிருந்து பிரிந்தது ஆற்றொண்ணா துயரத்தைத் தருகிறது.
உலகத்தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்து அதற்கான பணிகளில் உடனிருந்து ஒத்துழைத்த பெருந்தகை அவர். உலகத் தமிழருக்கான தொண்டுகளில் மட்டுமல்ல, நான் மேற்கொண்ட தமிழ்த்தொண்டுகள் அத்தனையிலும் துணைநின்றவர் அவர். பாவலரேறு அவர்களது மறைவிற்குப் பின்னால் அவர் விட்டுச்சென்ற பணியினைத் தொடர்ந்தவர்.
தமிழ் இலக்கிய - இலக்கண அறிவிலும், மறைமலையடிகள் காலத்திலிருந்து தொடரும் தனித்தமிழ் இயக்கம் பற்றிய வரலாற்று அறிவிலும் அவருக்கு நிகர் அவரே. எத்தனையோ அறிஞர்களின் ஐயங்களை களைவதற்கு உதவியவர். அவர் ஒரு நிறைகுடமாகத் திகழ்ந்தவர். அடக்கமாக, எளிமையாக, தன்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற உணர்வுடன் இறுதிமூச்சு வரை வாழ்ந்து மறைந்த பெருமைக்குரியவர். அவரின் மறைவின்மூலம் உலகத் தமிழர் பேரமைப்பும் நானும் பேரிழப்புக்கு ஆளாகியுள்ளோம். தமிழகம் தலைசிறந்த தமிழறிஞரை இழந்துவிட்டது.
அவரது மறைவினால் வருந்தும் அவரது துணைவியார் பொற்கொடி அம்மையார் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.