நெடுமாறனைப் பற்றி எம்.ஜி.ஆர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:07
சிங்கள இனவாத அரசுக்கு எதிராகத் தமிழக மக்களின் உள்ளக்குமுறல் களை வெளிப்படுத்தும் வித மாக 1983 ஆகஸ்டில் திரு. பழ. நெடுமாறன் அவர்கள் படகு மூலமாக இளைஞர்களுடன் இலங்கைக்குப் புறப்படத் தயார் ஆனார். இதையறிந்த தமிழக அரசு இராமேசுவரத்திலுள்ள படகுகளை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டது. இதன் காரணமாக எம்.ஜி.ஆர் அவர்களைச் சிலர் குறை கூறினார்கள். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் அவர்கள் 15-11-1983 அன்று தமிழகச் சட்டசபையில் அனைவரும் சிந்திக்கும் வகையில் உரை யாற்றினார். அது வருமாறு

்ஒரு நெடுமாறனை நாம் இழந்து விட்டால் இன்னொரு நெடுமாறனை நாம் உற்பத்தி செய்ய முடியுமா? இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்திராகாந்தி அம்மையாருக்கு வந்த ஆபத்தை தான் தாங்கிக் கொள்கிற ஆற்றல் பெற்றிருக்கிற நெடுமாறன் அவர்கள், அங்கே போய், இடையில் யாராவது சுட்டால் அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா அல்லது தடுப்பு கருவி இருக்கிறதா, ஒன்றும் இல்லை. மனம்தான் துணிவோடு இருக்கிறது. அங்கே போய் ஆபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? ஆகவே படகுகள் இல்லாமல் செய்தோம்.

...... உணர்ச்சி அவ்வப்போது வந்து போய் விடும். உணர்வுதான், நினைவு இருக்கும் வரை இருக்கும். அந்த உணர்வு இருக்க வேண்டும். நாம் செய்வது என்ன காரியம், சரியா, தவறா, என்ன விளைவு, எண்ணினேன். நான் போய்ப் பிரச்சாரம் செய்ய முடியாது. நெடுமாறன் செய்கிறார். ஆட்கள் வருகிறார்கள். தினமும் பத்திரிகையில் வருகிறது. அது வெளிவரட்டும். அது அந்த நாட்டுக்கு நல்லதாக அமையட்டும். அந்த உணர்வுகள் பெருகுமானால் பெருகட்டும் என்பதற்காக அவரை , நெடுமாறனை, கைது செய்யாமல் விட்டுவிட்டேன். ்

அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் இன்றைய முதல்வர்

ஜெயலலிதாவுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.