ஈழத்தமிழர்களுக்குத் தோள்கொடுப்போம்! துணை நிற்போம்! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் (ஜெனீவா மாநாட்டில் படிக்கப்பட்ட உரை) PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 மார்ச் 2013 10:40
உலகத் தமிழ் சகோதரர்களே, சகோதரிகளே!
வணக்கம். சிறப்பு வாய்ந்த இம்மாநாட்டில் நேரில் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் இங்கு கூடியுள்ள பிரதிநிதிகளுக்கு முதற்கண் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, கீழ்க்கண்ட கருத்துக்களை அவர்களின் மேலான பரிசீலனைக்கு வைக்கிறேன்.
தொன்மைச் சிறப்பும், வரலாற்றுப் பெருமையும் மிக்க தமிழினம் மிகப்பெரும் நெருக்கடியையும், அறைகூவல்களையும் எதிர்நோக்கியுள்ளது. இலங்கையில் பூர்வீகக் குடியினரான ஈழத் தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை செய்து வருகிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன.
தமிழர்களின் தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
உள்நாட்டில் 3 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த வீடுகளிலிருந்தும், ஊர்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டும் தங்களின் தாயக மண்ணிலேயே ஏதிலிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இராணுவச் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டுப் போதுமான உணவு, மருந்து மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் அல்லல்படுகிறார்கள். இளைஞர்கள் பிரித்தெடுக்கப்பட்டு விடுதலைப்புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கும் படுகொலைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இளம் பெண்களும், சிறுமிகளும் சிங்கள இராணுவத்தின் பாலியல் வன்முறைக் கொடுமைகளுக்கு இரையாக்கப் படுகிறார்கள்.
தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகளும், சிங்களக் குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. புகழ் பெற்ற கதிர்காமம் முருகன் கோயில் இப்போது புத்த பிட்சுக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் தமிழர்கள் தங்களின் வாழ்விடங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் இழந்து தவிக்கும் நிலைமை திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு இன அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சிங்களப் பேரினவாத அரசின் நடவடிக்கைகள் மிகக் கடுமையான போர்க் குற்றமாகும். இன அழிப்பு (ஏங்ய்ர்cண்க்ங்), போர்க்குற்றங்கள் (ரஹழ் ஈழ்ண்ம்ங்ள்), மனித உரிமை மீறல்கள் (ஐன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள் யண்ர்ப்ஹற்ண்ர்ய்ள்) என்ற கொடும் குற்றங்களை வரைமுறையற்ற அளவில் - ஈழத் தமிழினத்தை இலங்கைத் தீவிலிருந்து துடைத்தொழிக்கும் திட்டத்தோடு, உலகநாடுகளில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும், நச்சுப்பொருட்களையும் பயன்படுத்தி, வக்கிரமான வழிமுறைகளில் - சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்தியுள்ளது.
"இனப்படுகொலை' என்ற பெருங்குற்றத்துக்குள் அடங்கக்கூடிய செயல்பாடுகள் அனைத்தையும் சிங்களப் பேரினவாத அரசு செய்து முடித்துள்ளது.
இவை அனைத்தும் சர்வதேசக் குற்றவியல் நீதிக்குழுவினால் (ஒய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் டங்ய்ஹப் பழ்ண்bன்ய்ஹப்) விசாரிக்கப்பட வேண்டிய குற்றங்கள். இச்செயல்பாடுகள் அனைத்தும் இனப் படுகொலை பற்றிய ஐ.நா.வின் தீர்மானத்தின் 3-வது கூறுபடி, (ஈர்ய்ஸ்ங்ய்ற்ண்ர்ய் ர்ய் ற்ட்ங் டழ்ங்ஸ்ங்ய்ற்ண்ர்ய் ஹய்க் டன்ய்ண்ள்ட்ம்ங்ய்ற் ர்ச் ற்ட்ங் ஈழ்ண்ம்ங் ர்ச் ஏங்ய்ர்cண்க்ங் லி ஆக்ர்ல்ற்ங்க் bஹ்
தங்ள்ர்ப்ன்ற்ண்ர்ய் 260 (ஒஒஒ)ஆ ர்ச் ற்ட்ங் மய்ண்ற்ங்க் சஹற்ண்ர்ய்ள் ஏங்ய்ங்ழ்ஹப் ஆள்ள்ங்ம்bப்ஹ் ர்ய் 9 உங்cங்ம்bங்ழ் 1948) தண்டனைக்குரிய குற்றங்கள் ஆகும்.
ஐ.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள், இனப்படுகொலைத் தடுப்பு - தண்டித்தல் குறித்த சிறப்பு மாநாட்டில் (1948) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை உலக நாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
சிங்கள அரசு மனித உரிமைகளை மீறுகிறது. போர்க் குற்றம் புரிந்துள்ளது. தொடர்ந்து தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதோடு நமது கோரிக்கைகள் முடிவடைந்துவிடவில்லை.
ஈழத் தமிழர்கள் தங்களின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கு மேலான அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். இந்த இழிநிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாமும் அணியமாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு இறுதியான, நீதியான தீர்வு என்பது தமிழீழத் தனிநாடு அமைப்பதே ஆகும். ஐ.நா. ஏற்கெனவே விடுத்துள்ள பிரகடனத்திற்கு இது இசைவானதே ஆகும்.
1960ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ஐ.நா. பேரவை கூடி மனித குலத்தின் வாழ்வுரிமையையும், தேசிய இன உரிமையையும் அங்கீகரிக்கும் வகையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. 90 நாடுகள் இந்த பிரகடனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஏகாதிபத்திய நுகத்தடியில் பிணைக்கப்பட்டுத் தவித்த காலனிய ஆதிக்க நாடுகளுக்கும், மக்களுக்கும் விடுதலை வழங்குவது பற்றிய இந்தப் பிரகடனம் அடிமைப்பட்ட மக்களுக்கான விடுதலைப் பட்டயமாகக் கருதப்படுகிறது. அது வருமாறு:
ஐ.நா. பிரகடனம்
(உங்cப்ஹழ்ஹற்ண்ர்ய் ர்ய் ஏழ்ஹய்ற்ண்ய்ஞ் ஒய்க்ங்ல்ங்ய்க்ங்ய்cங் ற்ர் ஈர்ப்ர்ய்ண்ஹப் ஈர்ன்ய்ற்ழ்ண்ங்ள் ஹய்க் டங்ர்ல்ப்ங்ள், 1960: ஏங்ய்ங்ழ்ஹப் ஆள்ள்ங்ம்bப்ஹ் தங்ள்ர்ப்ன்ற்ண்ர்ய் 1514 (லய), 14 உங்cங்ம்bங்ழ் 1960)
1. அந்நிய ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது, சுரண்டுவது ஆகியவை அம்மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்; ஐ.நா. பட்டயத்திற்கு முரணானதாகும்; உலக அமைதிக்கும் கூட்டுறவிற்கும் எதிரானதாகும்.
2. அனைத்து மக்களுக்கும் (ஆப்ப் டங்ர்ல்ப்ங்ள்) சுய நிர்ணய உரிமை (தண்ஞ்ட்ற் ற்ர் நங்ப்ச்லிக்ங்ற்ங்ழ்ம்ண்ய்ஹற்ண்ர்ய்) உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களது அரசியல் அமைப்பையும், பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியையும் குறித்துச் சுதந்திரமாக முடிவு செய்து கொள்ளலாம்.
3. அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கியிருப்பதைக் காரணமாகக் காட்டி எந்த மக்களுக்கும் சுதந்திரம் அளிப்பதைத் தாமதப்படுத்தக்கூடாது.
4. அடிமைப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் மற்றும் சகலவிதமான ஒடுக்குமுறைகளும் நிறுத்தப்பட வேண்டும். அம்மக்கள் அமைதியாக வாழவும், முழுமையான சுதந்திர உரிமைகளைப் பெறவும் அவர்களின் தாயக மண்ணின் ஒருமைப்பாடு மதிக்கப்படவும் வேண்டும்.
5. சுதந்திரம் பெறாத அனைத்து நாடுகளுக்கும், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ள முடியாத நாடுகளுக்கும் உடனடியாகவும் எவ்வித நிபந்தனையும் இல்லாமலும் அம்மக்கள் சுதந்திரமாக வெளியிடும் விருப்பப்படி அதிகார மாற்றம் செய்யப்பட வேண்டும். முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்க யாருக்கும் இனம், சமயம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் எத்தகைய வேறுபாடும் காட்டப்படக்கூடாது.
6. ஓர் தேசிய இனத்திற்குச் சொந்தமான நாட்டின் நில ஒருமைப்பாட்டினையோ, தேசிய ஒற்றுமையையோ முழுமையாக அல்லது பகுதியாகச் சீர்குலைக்கச் செய்யப்படும் முயற்சிகள் ஐ.நா. பட்டயத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு எதிரானதாகும்.
7. அனைத்து அரசுகளும் நேர்மையாகவும் கண்டிப்பாகவும் ஐ.நா. பட்டயத்தில் பொறிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படியும், மனித உரிமைக்கான உலகளாவிய பிரகடனத்திற்கு ஏற்பவும், இந்தப் பிரகடனத்தின் அடிப்படையிலும் அனைத்து மக்களின் இறைமையான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனைத்து மக்களின் தாயக ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்.
ஐ.நா. பேரவை வெளியிட்ட மேற்கண்ட பிரகடனத்தின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தங்களின் அரசியல் விருப்பத்திற்கு ஏற்பவும் சுயநிர்ணய உரிமைக்கு ஏற்பவும் தமிழீழத் தனிநாட்டை அமைத்துக்கொள்ள எல்லாவிதமான உரிமைகளும் பெற்றவர்கள் என்பதை உலகத் தமிழர் மாநாட்டில் கூடியுள்ள பிரதிநிதிகளாகிய நாம் உலக நாடுகளுக்கு எடுத்துரைத்து வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
உலகில் உள்ள மற்ற தேசிய இன மக்களைப் போல முழுமையான இறைமை உள்ள மக்களாக வாழும் உரிமையும், தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் உரிமையும் ஈழத் தமிழர்களுக்கு இயற்கையாக உண்டு என்பதையும், அந்த வாழ்வுரிமையை அவர்கள் நிலை நிறுத்திக் கொள்ள அவர்களுக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்க உலகத் தமிழர்களாகிய நாம் உறுதி பூணவேண்டும்.
அளப்பரிய தியாகங்களைச் செய்து ஈழத் தமிழ் மக்களும், அவர்களுக்காக இறுதிவரை போராடிய போராளிகளும் வீறுகொண்டு நடத்திய விடுதலைப் போராட்டம் பல நாடுகளின் கூட்டுச் சதியின் விளைவாகப் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்திருப்பது தற்காலிகமானது. மீண்டும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கும், வெற்றி பெறுவதற்கும் நாம் முழுமையாக உதவவும், அதற்காக நம்மை முற்றிலுமாக ஒப்படைத்துக் கொண்டு எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்கவும் உலகத் தமிழர்களாகிய நாம் உறுதி பூணுவோமாக.
உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள சனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன்வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் ஈழத்தமிழர் சிக்கலுக்கு ஆதரவாகத் திருப்புவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் வேண்டிக் கொள்ள வேண்டிய கடமை உணர்வுடன் கூடியுள்ள உலகத் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய நாம் இதற்கு முதற்படியாக ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்து அவர்களிடம் ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முழுமனதாக ஆதரிக்க உறுதி பூண வேண்டுமென அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழர் வரலாற்றில் மிகநெருக்கடியான காலக்கட்டத்தில் இங்கு கூடியுள்ள உலகத் தமிழர் பிரதிநிதிகள் மேற்கண்ட கருத்துக்களையும் மற்ற பிரதிநிதிகள் கூறும் கருத்துகளையும் நன்கு ஆராய்ந்து, ஈழத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினைக் காணும் வகையில் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் என்ற முறையில் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழீழம் மலர்க,
உலகத் தமிழர் ஒற்றுமை ஓங்குக!
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.