கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புக் குழுவின் தலைவர் எஸ்.பி. உதயகுமாருக்கு விருது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 மார்ச் 2013 10:43
2012ஆம் ஆண்டிற்கான தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் முகுந்தன் சி.மேனன் விருது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் தீரமிக்க போராட்டத்திற்குத் தலைமை வகிக்கும் டாக்டர் எஸ்.பி. உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
25ஆயிரம் ரூபாயும், சான்றிதழ் பட்டயமும் அடங்கியது இவ்விருதாகும்.
தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக ஆண்டுதோறும் மறைந்த மனித உரிமை ஆர்வலர் முகுந்தன் சி. மேனன் பெயரில் மனித உரிமை-சுற்றுச்சூழல் தளத்தில் போராடும் நபர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது. என்.சி.ஹெச்.ஆர்.ஓ.வின் முதல் செயலாளராகப் பணியாற்றிய முகுந்தன் சி. மேனனை நினைவு கூற அவரது பெயர் இவ்விருதுக்கு சூட்டப்பட்டுள்ளது.
பேராசிரியர் நாகரி பாப்பையா, பேராசிரியர் ஆர். ரமேஷ், என்.பி.சேக்குட்டி, ஜே.தேவிகா மற்றும் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகியோர் அடங்கிய நடுவர்கள் குழு விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர்களைப் பரிசீலித்தது.
தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோவிலில் பிறந்த டாக்டர் உதயகுமார், ஹவாய் பல்கலைக் கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிய அவர், 2001ஆம் ஆண்டு முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.