ஜெனீவா பேரணியில் மக்கள் வெள்ளம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 21 மார்ச் 2013 10:45
இலங்கை அரசாங்கத்தின் அடாவடித்தனத்தைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபை சுதந்திர விசாரணையை துரிதப்படுத்த வேண்டி ஜெனீவா புகையிரத நிலைய சந்தியில் இதுவரை காணாத பல்லாயிரம் மக்கள் உலகின் பல பாகங்களிலுமிருந்து திரண்டனர்.
இங்கு கலந்துகொண்ட கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியா னஸ், இலங்கை அரசின் அடாவடித் தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் பேரவையிலிருந்தும் நிரந்தர மாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்தார்.
இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற் பாடு செய்யப்பட்ட பேரணி, இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் பேரவை சுதந்திர விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக் கும் பல வகை பதாதைகளைத் தாங்கிய வாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் தமிழக கம்யூனிஸ் டுக் கட்சித் தலைவர் தா. பாண்டியன், ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமுர்த்தி, புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன், தமிழ் நாட்டு மருத்துவ பேராசிரியர் தாயப்பன் கலந்து கொண்டனர்,
கனடா நாட்டின் லிபரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழருக் கான குரலுமான ஜிம் கரியானஸ் வழங்கிய தனதுரையில்,
"தமிழர்களாகிய உங்களோடு தோளோடு தோள் கொடுத்து நிற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையரசின் இனப் படுகொலையை உங்களோடு இணைந்து நாமும் எதிர்க்கிறோம். அந்த அரசு தொடர்ந்து இந்த நிமிடம் வரை தமிழர்கட்கு இன்னல்களையே செய்து வருகிறது.
இப்படிப்பட்ட மனித விழுமியங் கள் தெரியாத இவ் அரசிற்கு ஒரு செய்தியை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் கவுன்சில் செயற்பாடுகளில் கண்ட படு தோல்விகளை இச் சிறிலங்கா அரசு நன்கறியும்.
இந்நிலை நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என்பதுடன் என்றும் எம் உறவுகளாம் உங்களின் போராட்டத்திற்கு எம் தார்மீக ஆதரவு உள்ளது'' எனவும் குறிப்பிட்டார்.
இவர்களுடன் பிரான்ஸ் நாட்டு மாநகர சபை உறுப்பினர்கள், இத்தாலி நாட்டு மனித உரிமை ஆர்வலர், பல நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாட்டு உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
மாநாடு குறித்து தா. பாண்டியன் கருத்து
"மார்ச் 1, 2, 3, 4, ஆகிய தேதி களில் ஜெனிவாவில் நடைபெற்ற உலக மாநாட்டில் உலக அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்துப் பேசினோம்.
இதேபோன்று 2012ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் கோரிக்கையினை வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்திலேயே மாநாடு நடத்த அனு மதிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சி, லிபரல் கட்சிப் பிரதிநிதிகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறோம் என்று அறிவித்தார்கள். நாடே முழு ஆதரவு கொடுத்தது குறித்து செய்திகள் வெளி வந்தது. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நார்வே, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
இலங்கையில் 50 ஆண்டுகளாக இன அழிப்பு போர் நடைபெற்று வரு கிறது. 2008 - 2009ம் ஆண்டு இறுதி கட்டப் போரின்போது முப்படை களையும் குடிமக்களுக்கு எதிராக செயல்படுத்திப் படுகொலை செய்தனர்.
2009ல் மே 17 அன்று முள்ளி வாய்க்காலில் போருக்கு அப்பாற்பட்ட களம் என்று அறிவித்து விமானப்படை, தரைப்படை மூலம் கொத்து குண்டுகள் போட்டு அழித்தார்கள்.
இலங்கையில் நடைபெற்ற படு கொலைகள் உலகத்திற்குத் தெரிந்து விடும் என்பதற்காக ஊடகங்களை அனுமதிக்கவில்லை. ஜனநாயக நெறி முறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. உலக நெறிமுறைகளை கடைபிடிக்க வில்லை.
இட்லர் கூட அப்படி செய்தது கிடையாது. மனசாட்சி உள்ள ஒரு சில இராணுவ வீரர்கள் எடுத்த படம்தான் இன்று சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. எனவேதான் நீதிவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துகிறோம். அதை செய்ய இந்திய அரசு பயப்படுகிறது.
அமெரிக்கா கொண்டுவரும் தீர் மானத்தை இலங்கை அமெரிக்காவிடம் பேசி சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று சல்மான் குர்ஷித் ஆலோசனை சொல்கிறார். இவர்கள் செய்த தவறு உலக அரங்கில் அம்பலப் பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ஜெனிவாவில் நடத்தப்பட்ட மாநாடு மனித உரிமை மாநாடு நடந்த இடத்திலேயே, ஐநா கட்டிடத்திலேயே நடத்த அனுமதிக்கப்பட்டது.
சர்வதேச நீதிமன்ற விதிமுறைப் படி விசாரணை நடத்தப்பட வேண்டும். சாட்சிகள், ஆவணங்கள் எல்லாவற்றை யும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மட்டுமே இப்பிரச்சி னையை பேசித் தீர்க்க முடியாது. உலகத்தில் உள்ள அனைவரின் ஆதரவினையும் பெற வேண்டும்.
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.