சர்வதேச விசாரணை வேண்டும் டென்மார்க் அரசு வலியுறுத்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜூலை 2013 12:19
இலங்கைத் தீவில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற, சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக, சர்வதேச சுயாதீனமான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என டென்மார்க் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான இரு கட்சிகளும் அரச ஆதரவு கட்சியொன்றும் எதிர்க்கட்சியும் கூட்டிணைந்து வ­யுறுத்தியுள்ளன
அடுத்து, இலங்கைத் தீவின் மனித உரிமை நிலவரங்களை ஐ.நா மனித உரிமையாளர் தொடர்ந்தும் கண்காணிப்பதற்கு ஏற்றவகையில், டென்மார்க் அரசு பணியாற்ற வேண்டும் எனவும் அவர்கள் வ­யுறுத்தியுள்ளார்கள்.
அத்துடன், போரின் முடிவில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு டென்மார்க் அரசு பாடுபட வேணடும் என்பதையும் கூட்டிணைந்த கட்சிகள் வ­யுறுத்தியுள்ளன.
இந்தக் கட்சிகள், மறக்கப்பட்ட மோதுகை என்ற தலைப்பில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி டென்மார்க் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மாநாட்டினை டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்துடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கைத் தீவில் இறுதிப்போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டிய தேவையிருப்பதாக டென்மார்க் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போது டென்மார்க் வெளிநாட்டமைச்சர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், ஆதலால் அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேச அழுத்தம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டியது மிக முக்கியம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.