புதிய உதயம் : பொடா எதிர்ப்பு முன்னணி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:17

பொடா சட்டம் முன் வரைவாகக் கொண்டு வரப்பட்ட நேரத்திலிருந்தே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இன்று அது சட்டமாக மாறியபின்னும் எதிர்ப்புக் குரல் இந்தியா முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இச்சூழலில், தமிழக அளவில் பொடாவை எதிர்க்கும் அனைத்துக் கட்சியினரையும் ஒருங்கிணைக்கும் நல்ல முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் மேற் கொண்டது. அதன்படி 05-08-2002-இல் சென்னையில் பொடா எதிர்ப்பு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில்

1.நல்லகண்ணு (இ.பொ.க)
2..டி.கே.ரங்கராசன்(இ.பொ.க-மா)
3.க.பரந்தாமன், திருச்சி செளந்தரராசன்,சுப.வீரபாண்டியன் (த.தே.இ)
4.விடுதலை இராசேந்திரன் (பெ.தி.க.)
5.அ. சாதிக் பாட்சா (த.மு.மு.க)
6.இராசேந்திர சோழன் (த.தே.பொ.க)
7.பாலசுந்தரம் (இ.பொ.க.- மா.லெ)
8.செ. கதிரேசன் (மூ.மு.க)
9.கல்யாணி (ம.க.இ)
10.பேராயர் எஸ்ரா சற்குணம் (ச.நீ.இ)

உட்பட 23 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்வது சரியல்ல, பொடா சட்டமே தவறானது என்ற கருத்தை ஒருமித்த குரலில் வெளியிட்ட அக்கூட்டம், பொடாவை எதிர்த்துப் போராட நிலையான ஒரு கூட்டியக்கத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தது.

அம்முடிவுப்படி பொடா எதிர்ப்பு முன்னணி என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் தலைவராக இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்ல கண்ணுவும், அமைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் அமைப்பாளர் இரா. திருமாவளவனும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

முன்னணியின் சார்பில் பொடா எதிர்ப்புக் கருத் தரங்கம் ஒன்றை விரைவில் நடத்துவதென்றும் அக்கூட்டம் தீர்மானித்தது.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.