தடை உடைப்போம்! மீண்டும் தலை நிமிர்வோம்! சுப. வீரபாண்டியன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:19
தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதை யொட்டி, அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், அன்று இரவு விடுத்த அறிக்கை :

தமிழர் தேசிய இயக்கம். 1908-ஆம் ஆண்டின் குற்றவியல் திருத்தச் சட்டத்தின் கீழ் தமிழக அரசினால் இன்று தடை செய்யப்பட்டுள்ளது. எந்த விதமான பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபடாத. அப்படிப்பட்ட எண்ணமே இல்லாத. தமிழ் மொழி. இன மேம்பாட்டிற்காகவே பாடுபட்டு வரும் எங்கள் இயக்கத்தைத் தடை செய்தி ருப்பது நியாயமற்றது. நீதிக்கு முரணானது. கண்டனத் திற்குரியது. தமிழின உணர்வையே தமிழ்நாட்டில் அழித்து விடும் முயற்சியில் நம் முதலமைச்சர் இறங்கி யிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. அவர் முயற்சி ஒருநாளும் வெற்றி பெறாது. தமிழையும். தமிழின உணர்வையும் எவராலும் எக்காலத்திலும் அழிக்க முடியாது.

மக்களாட்சி மரபுகளிலும். சனநாயக நெறிமுறைகளிலும் நம்பிக்கைக் கொண்ட அனைத்துக் கட்சிகளும். தமிழ் அமைப்புகளும். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் இத்தடையை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் இயக்கத்தைத் தடை செய்திருக்கும் குற்றவியல் திருத்தச் சட்டத்தை காந்தியாரே எதிர்த்துப் போராடியிருக்கிறார். வெள்ளைக்காரர்களால் 1908-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம். 1911-ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட தேசத் துரோகத் தடுப்புச்சட்டம். அதன் பின்பு கொண்டுவரப்பட்ட ரெளலட் சட்டம் ஆகிய மூமூமூமூன்றையும் எதிர்த்துதான் அண்ணல் காந்தி அன்று போராடினார். அவர் தொடக்கி வைத்தப் போரா ட்டத்தை இன்று தொடரும் பணி எங்கள் தோள்களுக்கு வந்திருக்கிறது.

இதே சட்டத்தின் கீழ் தான். பொதுவுடைமை இயக்கங் களுக்கு நிதி உதவி செய்ததாகக் கூறி மக்கள் கல்வி இயக்கம் என்னும் அமைப்பு 1950-ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அவ்வமை ப்பின் நிறுவனர் வி. ஜி. ராவ் அந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து. அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது (196 of AIR 1952) உச்சநீதிமன்றமும் அந்தத் தடை செல்லாது என்று தீர்ப்பளித்தது.

அதன் பிறகு கடந்த 50 ஆண்டுகளில் இச்சட்டத்தின் கீழ் அல் உம்மா இயக்கமும் எங்கள் இயக்கமும் தான் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றம் சென்று விரைவில் நியாயத்தை நிலைநாட்டுவோம்.

தமிழகமெங்கும் உள்ள நம் இயக்கத் தோழர்கள் பதட்டப் படாமலும். சோதனைக் கண்டு துவளாமலும். உறுதியாகவும் அமைதியாகவும் இருந்திட வேண்டுகின்றேன். நம் தலைவர் சிறையில் இருக்கும் இந் நேரத்தில். இச்சோதனைகளை வென்று முடித்து அவர் வெளி வரும் போது வெற்றிக் கனியை அவருக்கு பரிசாய் அளிப்போம்.

தடை உடைப்போம். மீண்டும் தலை நிமிர்வோம்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.