விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2013 13:56

தமிழீழ விடுதலைப் புலிகள் - தமிழீழம் - 20.7.2013

ஈழத்துணை மதிப்பளிப்பு
அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்கள்

சிறிலங்கா அரசு தமிழினத்தின் மீது நடத்திவரும் இனஅழிப்பு நடவடிக்கைக்கு எதிரான தமிழ்த் தேசியப் பணியினை இந்தியாவிலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் செய்து வந்த அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்களை நாம் இழந்துவிட்டோம்


அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்த போதிலும் தமிழீழ மண்மீது கொண்ட தீராப்பற்றின் காரணமாக தமிழீழ விடுதலைப்பயணத்தில் தானும் சேர்ந்து கொண்டு உறுதி தளராது உழைத்த ஒரு தேசப்பற்றாளராக திகழ்ந்தார்.
எமது மொழி, கலாச்சாரம், பூர்வீக இருப்பிடம் என்பனவற்றை மீட்டெடுக்கும் எமது நீண்ட விடுதலைப்பாதையில் அமரர் திண்டுக்கல் தி.அழகிரிசாமி அவர்கள் ஆழமான நம்பிக்கையும் பற்றும் கொண்டு உழைத்து வந்துள்ளார்.
திரு பழ நெடுமாறன் அவர்களின் வகுப்புத்தோழரான இவரது அரசியல் வாழ்க்கை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கத்தோடு தொடங்கியது. உலகத் தமிழர் பேரமைப்பிலும் முக்கிய பங்காற்றியவர். தீவிர தமிழீழ ஆதரவாளர். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனுடன் நெருக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்தவர். 1984 காலப்பகுதிகளில் எமது புதிய போராளிகளின் உருவாக்கத்திற்கு தளம் தந்து உதவியவர். இப்பெருமைக்குரியவரை "ஈழத்துணை' என்ற மதிப்பை வழங்குவதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.
அமரர் திண்டுக்கல் தி. அழகிரிசாமி அவர்களின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தியாவாழ் தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் பேசும்மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.