முள்ளிவாய்க்கால் முற்றச் சுற்றுச்சுவரை கட்டித்தரக்கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை பூட்டுப்போட்டு மாணவர்கள் போராட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 டிசம்பர் 2013 10:22

PoottuPodumமுள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை தமிழக அரசு கட்டித்தரக் கோரி சென்னை ஜெமினி மேம்பாலத்தை மறித்து மாணவர்கள் பூட்டுப்போட்டு போராட்டம் நடத்தினர்.

"முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முற்றத்தோடு முடிந்தது அதிமுக'
தஞ்சாவூரில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் பகுதியை தமிழக அரசு மீண்டும் கட்டித்தர வலியுறுத்தியும்,

வழக்குப் பதிவு செய்யப்பட்ட பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர். அவர்கள் ஏந்தி வந்த பதாகைகளில் "முள்ளிவாய்க்காலோடு முடிந்தது திமுக; முள்ளிவாய்க்கால் முற்றத்தோடு முடிந்தது அதிமுக" என எழுதப்பட்டிருந்தது.
காலை 8 மணி முதலே செம்மொழிப் பூங்காவுக்கு அருகில் திரண்டிருந்த மாணவர்கள் திடீரென ஜெமினி மேம்பாலத்தை மறித்து பூட்டுப் போடும் போராட்டத்தினை நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களை தேனாம்பேட்டையில் உள்ள மங்களம் மஹால் திருமண மண்டபத்தில் தடுத்து வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.
300க்கும் மேற்பட்ட காவல்துறையினர், உளவுத் துறையினர் அப்பகுதியில் காலை முதலே குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

PoottuPodum02

PoottuPodum04

PoottuPodum

PoottuPodum03

PoottuPodum01

 

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.