இன்னமும் காட்டுமிராண்டிகள் - ப.நெ. PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 15:54
இருபதாம் நூற்றாண்டு முடிவடைந்து இருபத்தோ ராம் நூற்றாண்டில் உலகம் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் காட்டுமிராண்டி களாக மக்கள் வாழ்ந்த காலத் தில் கூட செய்தறியாத இழி செயலைச் செய்யத் துணிந்த கயவர்கள் தமிழ்நாட்டில் இருப்பது கண்டு நாம் அனை வருமே வெட்கித் தலைகுனிய வேண்டும்.

ஆதிக்கசாதி வெறிகொண்ட வர்கள் பழந்தமிழர்களை அடித்து, சூடு போட்டதோடு மலந்தின்னவும் வைத்துள்ளனர் என்ற செய்தி அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது.

உலகிற்கே நாகரிகம் கற்றுக் கொடுத்த தமிழ்நாட்டில் இத் தகைய அநாகரிக விலங்காண்டி களும் இருப்பது தமிழ்க் குலத்திற்கே அவமானமாகும்.

திண்ணியம் கிராமம் பழந் தமிழரான கருப்பையா என்ப வர் தனது தங்கைக்கு தொகுப்பு விடு பெறுவதற்காக திண்ணி யம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி இராசலட்சுமியிடம் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2000 கொடுத்திருந் தார். தொகுப்பு வீடு கிடைக்காத தால் கருப்பையா தான் கொடுத்த பணத்தை திருப்பித் தர பல முறை இராசலட்சுமி யிடம் கேட்டும் கிடைக்க வில்லை. மே 20 அன்று, முன்னாள் தலைவர் இராசலட்சுமி யிடம் கொடுத்த பணத்தை ஊர்க்காரர்கள் வாங்கித் தர வேண்டும் என்றும் பணம் கிடைக்காவிட்டால் ஊர் வெட்டிமை வேலை செய்யப் போவதில்லை என்றும் கருப்பையா தப்படித்து ஊர் முழுக்க சொன்னார். அவருடன் முருகேசன், இராமசாமி ஆகியோரும் வந்தனர்.

இராசலட்சுமியின் கணவர் சுப்பிரமணி தப்படித்த கருப்பையாவை அழைத்து தாக்கி யதோடு மன் னிப்பு கேட்க வைத்துள்ளார்.

கருப்பையா தண்டோரா போட்டபோது உடன் சென்ற முருகேசன், இராமசாமி ஆகிய இருவரையும் இராசலட்சுமி யின் கணவர் சுப்பிரமணி வீட்டிற்கு அழைத்து, அடித்துச் சூடு போட்டுள்ளார். தண்டோரா போட்டது தப்பு என ஊர் முழுக்க தண்டோரா போடச் சொல்லி இருக்கிறார்கள். அதன் படி தண்டோரா போட்டு மன்னிப்பு கேட்ட பின்பு முருகேசன், இராமசாமி இருவரையும் கட்டாயப்படுத்தி மலத்தைச் சாப்பிட வைத்துள் ளார் சுப்பிரமணி.

இந்த வன்கொடுமைக்கு எதிராக மனித உரிமை வழக் கறிஞர்கள் மையம் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வைத்துள்ளது.

சட்டத்தின் சந்து-பொந்து களில் புகுந்து அவர்கள் தப்பி விடக் கூடாது. மிகக் கடுமை யான தண்டனைக்கு இவர்கள் உட்படுத்தப்பட்டால்தான் எதிர்காலத்தில் இத்தகைய இழிசெயலைச் செய்ய யாரும் துணியமாட்டார்கள்.

கையூட்டுப் பெற்று ஊழல் செய்ததற்காகவும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு தக்க நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.