ஆங்கிலேயர் வகுத்த சட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 மார்ச் 2014 12:19

இந்தியத் தண்டனைச் சட்டம் 138 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. சிப்பாய்க் கலகம் என ஆங்கிலேயரால் அழைக்கப்படும். முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் முடிந்த சூழ்நிலையில் 1860-ல் இந்தச் சட்டத்தினை அன்றைய ஆங்கிலேயே அரசு உருவாக்கிற்று.

அன்று சட்டப் பொறுப்பினை ஏற்றிருந்த மெக்காலே என்பவர்தான் இந்தச் சட்டத்தினை வரைந்தார். இன்றும் மாறாமல் இருந்து வரும் இந்தியக் கல்வித் திட்டத்தினை உருவாக்கியவரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இந்தியா விடுதலை பெறுவதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டம்தான் விடுதலைப் பொன்விழா கொண்டாடப் பெற்ற பின்னரும், இன்றும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. நாம் விடுதலை பெற்று, தமக்கென ஒரு புதிய அரசியல் சட்டத்தின் உன்னதமான விழுமங்களுக்கெதிரான இந்தியத் தண்டனைச் சட்டத்தினை அப்படியே வைத்துக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்பது புதிராகவே இருந்து வருகிறது. இந்திய தண்டனைச் சட்டம் எனும் பொருத்தமற்ற இன்றுள்ள சட்டத்தினை அறவே நிராகரித்துவிட்டு நமது தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் தண்டனைச் சட்டம் ஒன்றினை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற தேசியத் தன்மானம் ஏன்தான் இன்னும் வரவில்லையோ தெரியவில்லை. இதில் தேசியம் தேவையில்லை போலும்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.