முதுபெரும் எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014 12:20

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முதுபெரும் எழுத்தாளரும் சிறந்த இலக்கிய விமர்சகருமான தி.க.சிவசங்கரன் அவர்கள் காலமான செய்தியை அறிய மிகவருந்துகிறேன்.

அவரின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து வளர்த்தார். இலக்கியத்துறையிலும் அரசியல் துறையிலும் யாருக்கும் அஞ்சாமலும் விருப்பு வெறுப்பு இன்றியும் தன்னுடைய கருத்துக்களை இடைவிடாமல் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார். சிறந்த தமிழ்த்தேசிய உணர்வாளராகவும் அதே வேளையில் முற்போக்காளராகவும் திகழ்ந்த பெருமைக்குரியவர். உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவருக்கு வழங்கப்பட்ட உலகப் பெருந்தமிழர் என்ற விருதுக்கு ஏற்றபடி உலகத் தமிழர்களும் பாராட்டும் வண்ணம் வாழ்ந்தார். அவருடைய பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.