எங்கும் தமிழே முழங்குமடா - - இரா. செம்பியன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 14:53

எங்கும் தமிழே முழங்குமடா - நம்
எல்லோரும் ஒன்றாய்க் குரல்கொடுத்தால்
நம்தமிழ் இனமும் நாடும் நிலைபெற
நமக்குள் ஒற்றுமை வேண்டு மடா
- எங்கும் தமிழே முழங்குமடா
தங்களுக் குள்ளே முரண்படும் போக்கைத்
தமிழினத் தலைவர்கள் தவிர்த் திடணும்
இங்கோர் இயக்கம் அங்கோர் இயக்கம்
என்பதை இனிமேல் கைவிடணும்
- எங்கும் தமிழே முழங்குமடா


பகுத்தறி வாளர் போர்வையிலே தமிழ்ப்
பகைவர்கள் நாட்டில் உலவுகின்றார்
தகுதியை அடகு வைத்திடும் இவர்கள்
தமிழர்கள் என்பது வெட்கமடா
- எங்கும் தமிழே முழங்குமடா
தாய்த்தமிழ் மரபைப் பழிப்பவர் முன்னே
தலைகுனிந் திருப்பவன் கோழையடா
காய்களி றென்றே கனன்றே எழுபவன்
கன்னித் தமிழ்மகன் ஆகுமடா
- எங்கும் தமிழே முழங்குமடா
இனத்த வரெல்லாம் சிறையினில் வாடும்
இழிநிலை தன்னைப் போக்கிடுவோம்
நினைத்தவ ரெல்லாம் அரியணை ஏறும்
நிலையினை இனிமேல் மாற்றிடுவோம்
- எங்கும் தமிழே முழங்குமடா
குடிவதைத் தாளும் கொடுங்கோ லாட்சியைக்
குவலயம் ஏற்றிட மறுக்குமடா
அடிதடி யாலே இயங்கும் அரசுகள்
அன்பின் வேர்களை அறுக்குமடா
- எங்கும் தமிழே முழங்குமடா
அறம்பொரு ளின்பத் திறந்தெரிந் தோரின்
அறிவுரை ஏற்பதே நாடாகும்
வரும்பொரு ளுரைக்கும் வகையறியாதார்
வழியினில் சென்றால் காடாகும்

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.