கொலைகார கோத்தபயா கைது உறுதி! அமெரிக்க சட்டப் பேராசிரியர் அறிவிப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 ஜூன் 2014 14:39

தமிழ்த் தலைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் சரணடைந்தவுடன் அவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யும்படி கோத்தபயா இராசபக்சே உத்தரவிட்டதற்கு சாட்சியங்கள் உள்ளன. விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் போரில் எப்படியும் வெற்றிபெறுவதற்காக அப்பாவி பொதுமக்களை வேண்டுமென்றே கொலை செய்ய தான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை என பலமுறை அவர் கூறியுள்ளார் என பேராசிரியர் ரைடன் குட்மேன் கூறியுள்ளார்.

கோத்தபயாவுக்கு எதிராக ஏராளமான சாட்சியங்கள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். நியூயார்க் பல்கலைக் கழகத்தின் சட்டக்கல்லூரியில் இவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மேலும் கூறுகையில் "அமெரிக்காவில் உள்ள சிறைச்சாலைகளின் உள்சுவர்கள் எப்படி இருக்கும் என்று கோத்தபயா பார்க்காவிட்டாலும் விரைவில் அதை அவர் பார்க்க வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடருகின்றன என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு இலங்கையில் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை அதிபர் இராசபக்சேயின் சொந்தத் தம்பியும், பாதுகாப்புத் துறைச் செயலாளருமான கோத்தபயாவுக்கு எதிரான இந்த அறிவிப்பு இராசபக்சே குடும்பத்தைக் கலங்கடித்துள்ளது.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.