தமிழ்த் தேசியமமைப்போம் - இரா. சொ. இராமசாமி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014 14:59

தமிழ் நாட்டின் தாய் மொழியாம்
தமிழ் மொழியைக் காக்கவே
தமிழரெல்லாம் ஒன்றிணைந்தே - தனி
தமிழ் தேசியமமைப்போம்


தமிழ்த் தரணியில் நம் மொழியாம்
தமிழ் மொழித் தேயுமென்றே
உலக மொழியறிஞர்கள் கூறுகிறார்கள்
இனி வருங்கால இளந்தலைமுறைகளையும்
நம் தாய் மொழித் தமிழ் மொழியையும்
அழியாமல் காக்கும் கடமை
இன்றைய தமிழறிஞர்களுக்கும்
தன்மானமுள்ள தமிழர்களுக்குமாம்
இது காலத்தின் கட்டாயமன்றோ!!
தமிழ் மொழியைக் காக்க தன்னுயிரையே
ஈந்தோர் எண்ணற்ற தியாகிகளை - நாம்
எண்ணியே நினைவு கூறுவோம்
அந்தாதியாய் முளைத்த தமிழ்மொழி - இனி
வரும் காலங்களிலும் வளரும் மொழி தமிழ்
நம் மொழி உலகமறிந்த தமிழ்மொழியாம்
தமிழர்கள் தம் மொழியை காக்கமலிருப்பது தகுமோ?
காக்காமல் விட்டால் இழிநிலையாகுமன்றோ?
தமிழ் மொழியைக் காக்க எத்தனைத்
தடைகள் வருமாயினும் - நாம்
அத்தனைத் தடைகளையும்
தாண்டியே தமிழ் தேசியமமைத்து
நாடு, மொழி, இனம்
வளர்ப்போம்! காப்போம்!

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.