ஏ.பி. வெங்கடேசுவரன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 13:27

முன்னாள் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஏ.பி. வெங்கடேசுவரன் அண்மையில் காலமான செய்தியறிந்து தமிழ்கூறும் நல்லுலகம் துக்கத்தில் ஆழ்ந்தது. ஈழத் தமிழர் பிரச்சினையை முழுமையாக உணர்ந்து செயல்பட்ட சிறந்த அதிகாரியாக அவர் திகழ்ந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஈழத்தமிழர் பிரச்சினையில் ஒன்றன்பின் ஒன்றாக தவறுகள் செய்தபோது அதைச் சுட்டிக்காட்டித் திருத்த முயன்றவர். அதன் காரணமாகவே இராஜீவால் அவமதிக்கப்பட்டபோது தனது பதவியைத் தூக்கி எறிந்தவர்.

அவருடன் நெருங்கிப் பழகிய என் போன்றோருக்கு அவரது மறைவு பெரும் துயரத்தை அளித்துள்ளது. நேர்மையும், கடமை உணர்வும், மனித நேயமும் நிறைந்த மகத்தான மனிதர் மறைந்திருக்கிறார். அவரின் மறைவினால் வருந்தும் அவருடைய குடும்பத்தினருக்கு உலகத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.