தமிழர் தேசிய முன்னணியின் செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014 14:25

கடலூர் மாவட்டம்

தமிழர் தேசிய முன்னணியின் கடலூர் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. நெய்வேலி சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் கோரிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் ஏற்று செயல்படுத்த இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

2. தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா தஞ்சையில் நடைபெறவுள்ளது. நிகழ்விற்கு பெரும் திரளாக பங்குபெற இக்கூட்டம் முடிவு செய்கிறது.

4. மத்திய பா.ஜ.க. மோடி அரசின் இந்தி, இந்துத்துவா, வடமொழி திணிப்பு மற்றும் கடல் கடந்த தமிழக மக்களுக்கு தொடர்ந்து இழைக்கும் துரோகங்களை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

5. இளைஞர்களைச் சீரழிக்கும் மதுக்கடைகளை மூட இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

7. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அரசுடைமையாக்கப்பட்டது. அரசு கல்வி நிறுவனங்களில் பின்பற்றுகிற அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

அக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கீ.செ. பழமலை, துணைத் தலைவர்கள் ச.பழனிச்சாமி, புலவர். பொன்னையன், செயலாளர்கள் வை.இரா. பாலசுப்பிரமணியன், வீ. கமலக்கண்ணன், பொருளாளர் சி. சோமசுந்தரம், இளைஞர் அணி அமைப்பாளர்கள் இர. இலக்குணவன், ஏ. வினோத்குமார், மாணவர் அணி அமைப்பாளர்கள் பாலு, விருத்தாச்சலம் பா. பாரதிதாசன், மகளிர் அணி சா. இந்திராணி, கு.ச. பாலகிருட்டிணன், மு. கலியமூர்த்தி, அ. சிவராஜ், செ. ஜெயப்பிரகாசு, ச. சதீஷ், இரா. பிரவீன்குமார், சி. கரிகால் வளவன், கு. வீரவேல், தி. சிவக்குமார் மற்றும் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் பா. பாரதிதாசன் நன்றி கூறினார்.

திருபுவனை சட்டமன்றத் தொகுதிக் கூட்டம்

தமிழர் தேசிய முன்னணியின் திருபுவனை சட்டமன்றத் தொகுதிக் கூட்டம் பொது:ச செயலாளர் ந.மு. தமிழ்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் திரு. பெ. பராங்குசம், செயலாளர் கோ. தமிழுலகன், துணைச் செயலர் இரா. இளமுருகன், பொருளாளர் துரை. மாலிறையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் திருபுவனை சட்டமன்றத் தொகுதியின் தலைவராக திரு. கோ. கேசவன் அவர்களும் துணைத் தலைவராக திரு. மு. இராஜி அவர்களும், செயலாளராக திரு. சீனி. சேதுராமன் அவர்களும், துணைச் செயலாளராக திரு. கோ. சிவப்பிரகாசம் அவர்களும், பொருளாளராக திரு. அ. வெங்கடேசன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக திரு. சு. தமிழ்ச்செல்வன், திரு. சீனு.அயயனார், திரு. ந. செல்வராசு, திரு. வெ. திருமூர்த்தி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தை திரு. இரா. இரத்தினவேலு, திரு. மு. கசேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

தஞ்சை : திலீபன் நினைவு நாள்

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பாக 26-09-14 வெள்ளிக் கிழமை அன்று காலை 11 மணிக்கு திலீபன் அவர்களின் நினைவு நாள் கொண்டாடப்பட்டது.
தமிழர் தேசிய முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஐயனாபுரம் திரு. சி. முருகேசன் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

மேலும் தமிழர் தேசிய முன்னணியின் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. பொன். வைத்தியநாதன், மாநிலப் பொதுச் செயலாளர் திரு. சதா. முத்துக்கிருட்டிணன், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிர்வாக அலுவலர் திரு. ஜோ. ஜான் கென்னடி, முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் தலைவர் திரு. இராமலிங்கம், தமிழர் தேசிய பேரியக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. பழ. இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் குழ. பால்ராசு, மனித உரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் திரு. மு. கரிகாலன் ஆகியோர் நினைவு உரையாற்றினார்கள்.

தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் திரு.தியாக. சுந்தரமூர்த்தி நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டப் பொருளாளர் திரு. அ. இருதயராசு, மாவட்டச் செயலாளர் திரு. மு. முருகையன், மாவட்ட துணைத்தலைவர் திரு.சி.மு. இராசா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. பழ. திருமாவளவன், மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. உ. ரமேசு கண்ணன், திரு. மு. லெனின், மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு. சாமி. கரிகாலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் திரு.ப. இரவிச்சந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் திரு. தியாக. கனகராஜ், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் துணைத் தலைவர் திரு. ந. வெற்றியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.