தமிழர் நாட்டில் வந்தேறிகள்... - கா.தமிழ்வேங்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 05 நவம்பர் 2014 15:20

தமிழ்நாட்டில் முன் எப்போதையும் விட வடஇந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இந்தி படித்தால் இந்தியாவில் வேலை கிடைக்கும் என்றார்கள். ஆனால் இந்திக்காரர்கள் நம் இடத்தில் கூ­க்கு வேலை செய்கிறார்கள் என்றும், இந்தியாவில் தமிழ் நாடு தொழில் துறையில் முதன்மை மாநிலத்தை நோக்கி முன்னேறுவதின் அடையாளம்தான் இது என்றும், பெருமிதமான இரு கருத்துக்கள் நம்மில் நிலவி வருகின்றன.

உண்மையில் தமிழகம் பெரும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். ஏன்?

சில பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒரு வடஇந்தியரைப் பார்த்துவிட்டால் நம் மண்ணுக்கு அந்நியராகத் தெரியும் அந்த மனிதரை பலரும் திரும்பிப் பார்த்துச் செல்வார்கள். இன்று அப்படி யாராவது பார்த்தால் அவர் பல ஆண்டுகளாக வீட்டுச்சிறையில் இருந்திருக்க வேண்டும் அல்லது அரசாங்கச் சிறையில் இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள உடலுழைப்புத் தொழி­ல் பெரும்பகுதி இடத்தை வட இந்தியர்கள் இன்று இட்டு நிரப்பிவிட்டார்கள். பூட்டு வணிகம், கம்பளிப் போர்வை, பஞ்சு மிட்டாய், சோன் பப்டி, பானிபூரி, புடவை விற்பனை, நாட்டு மருந்து, குல்பி ஐஸ் எனத் தனி நபர்களாக தள்ளு வண்டியிலும், தோளிலும் சுமந்து தெருத் தெருவாக விற்பனை செய்பவர்களி­ருந்து நம் வீட்டுப் பெண்களின் கைகளுக்கு மருதாணி வரைவது வரைக்கும் அவர்களே நிறைந்திருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள், திரைத் துறையினர், தொழிலதிபர்கள், திடீர் பணக்காரர்கள் என பெரும் புள்ளிகளின் வீட்டுக் காவலாளியாக இன்று வடஇந்தியர்களே தமிழ் நாட்டில் காணப்படுகிறார்கள். உணவகங்களில், துணிக் கடைகளில், துப்புறவு பணியி­ருந்து நம்மை பரிசோதித்து உள்ளேயும், வெளியேயும் அனுப்புவது வரை வடஇந்தியர்களே.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா கட்டுமானப் பணிகளிலும், உதாரணமாக பாலம் கட்டுதல், புறவழிச்சாலை அமைத்தல், அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகம் கட்டுதல் என எல்லாவற்றிலும் இவர்களின் ஆதிக்கமே நிறைந்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள ஊட்டி, வால்பாறை போன்ற இடங்களில் ஆயிரக் கணக்கில் அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்தவர்களே காணப்படுகிறார்கள்.

இந்தியாவில் தங்க ஆபரணங்கள் செய்வதில் கொல்கத்தா, மும்பைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் கோவை, விழுப்புரம் நகரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இங்கு உற்பத்தியாகும் தங்க ஆபரணங்களுக்கு இந்தியச் சந்தையில் நல்ல மதிப்புள்ளது. பெரிய ஆபரணங்கள் செய்வதில் கோவை முதன்மை பெறுவதைப் போலவே மிகச்சிறிய ஆபரணங்களை நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் சிறப்பாகச் செய்வதில் விழுப்புரத்து ஆபரணத் தொழிலாளர்கள் கைதேர்ந்தவர்கள். 100, 200 மில்­ கிராமில் கூட ஆபரணங்களைச் செய்து விடுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கான மோதிரம் இங்கு தயாரிக்கப்பட்டு இந்தியாவெங்கும் ஏற்றுமதியாவதே இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

இந்த தங்க ஆபரணத் தொழிலுக்குத் தேவையான சலங்கை உருக்குதல், பட்டை வெட்டுதல், கம்பி நீட்டுதல் போன்ற துணைத் தொழில்களைச் செய்ய கூட்டம் கூட்டமாக வந்து தமிழ்நாட்டில் குவிந்துள்ளார்கள் வங்காளிகள். இங்குள்ள மார்வாடிகள் இவர்களுக்கே வேலை தருகிறார்கள். இத்தொழிலைப் பாரம்பரியமாக செய்துவந்த தமிழர்கள் வேலை இழப்பின் காரணமாக குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் சோகநிகழ்வு உள்ளூர் செய்திகளாக மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

இந்தியாவின் மருத்துவத்திற்கான தலைநகராக சென்னை திகழ்வதுபோல் கல்விக்கான இடமாகவும் தமிழ்நாடு இருப்பதால் வடஇந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிகுந்துள்ளது. சென்னை, வேலூர், கோவை, சிதம்பரம் எனப் பல முக்கிய நகரங்களின் வெளி மாநில மாணவர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே செல்கின்றன. சென்னையில் உள்ள ஒரு தனியார் உயர்கல்விக் குழுமத்தின் விடுதியில் தங்கிப் படிக்கும் வடஇந்திய மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 15000க்கும் அதிகமாகும்.

இப்படி கல்வி, வேலை வாய்ப்பு என வெளியாரின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் வீட்டு வாடகை உயர்ந்துள்ளது. தமிழர்களுக்கு இங்கு வீடு கா­யில்லை என்ற அறிவிப்பு பலகைகூட ஒரு சில இடங்களில் தொங்கவிடப்பட்டுள்ளதை காணலாம்.

வடஇந்திய மாநிலங்களின் பாரம்பரிய விழாக்கள் இங்கு முக்கியத்துவம் பெருகின்றன. கூடா நட்பு, தவறான சேர்க்கை காரணமாக பண்பாட்டுச் சீரழிவுடன் இனக்கலப்பும் நிகழ்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் வாழ்வாதாரம், எதிர்காலம் கண்முன்னே பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இதுபற்றியெல்லாம் தமிழினம் கவலைப்படாமல் இருப்பதும், தமிழினத்தின் மீது ஆட்சி ஆதிகாரத்தை செலுத்திக் கொண்டிருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பதும்தான் பெரும் துயரம்.

வடஇந்தியர்களின் எண்ணிக்கை பெருகத் தொடங்கிய பிறகே தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரமும், கொலை, கடத்தல், கற்பழிப்பும் பெருகியுள்ளன. ஆனால் இச்சம்பவங்களை அச்சு, மின் ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன. நூதனத் திருட்டி­ருந்து, வங்கி ஏ.டி.எம்-ல் புகுந்து கொள்ளை அடிப்பது என விஞ்ஞானத் திருட்டு வரை தமிழகத்தில் தங்களின் கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படி குற்றச் செயல்களும், பண்பாட்டு, பொருளியல் சீரழிவுகளைத் தமிழர்களும், தமிழகமும் சந்தித்தாலும், "வடஇந்தியர்கள் கடும் உழைப்பாளிகள்''. நம்மவர்கள் "உடலுழைப்புச் சோம்பேறிகள், வலுவற்றவர்கள்'' என்று நம்மை நாமே தாழ்த்திப் பேசும் கருத்து தமிழகத்தில் பரவலாக காணப்படுகிறது. இது உண்மையா?

நாள் முழுக்க உழைத்தாலும் 100 ரூபாய்க்குமேல் தங்கள் மாநிலத்தில் ஊதியமாகப் பெறமுடியாததை, அதே உழைப்பைச் செலுத்தி தமிழகத்தில் ரூபாய் 200 பெறுகிறார்கள். இதே வேலையை தமிழர்களாலும் செய்ய முடியும். ஆனால் செய்ய முன்வராததற்கு காரணங்கள் உள்ளன.

வடஇந்திய, வடகிழக்கு மாநிலங்களி­ருந்து இங்கு வேலைசெய்யும் எவருக்கும் பணிப் பாதுகாப்புக் கிடையாது. தொழிலாளர் சட்டம் சொல்லும் குறித்த வேலை நேரம் என்பது கிடையாது. தொழிலாளர்களைப் பாதுகாப்பதற் காகவே உள்ள தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம், மரண விபத்துக்கள் சட்டம், பேறுகாலப் பயன்கள் சட்டம், பணியமர்த்துவோர் பொறுப்புநிலைச் சட்டம், தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம், கூ­ வழங்கல் சட்டம், குறைந்தபட்ச கூ­ வழங்கல் சட்டம் என எதுவும் வந்தவர்களுக்குத் தெரியாது. வேலை தருபவர்களோ இச்சட்டங்களைக் கடைபிடிப்பதில்லை.

இதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் அண்மையில் சென்னை - மவு­வாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து 60-க்கும் மேற்பட்டவர்கள் ப­யானார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஒடிசா, ஆந்திராவைச் சார்ந்தவர்கள். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசும், ஆந்திர, ஒடிசா அரசும் தலா 5 லட்சத்தை இழப்பீடாக வழங்கின. ஆனால் வேலை கொடுத்த கட்டுமான நிறுவனத்தினர் அளித்த இழப்பீடு என்ன? இந்த கேள்விக்கு இதுவரை விடையில்லை. நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இவ்வழக்கு நீதி மன்றத்தில் இருப்பதால் ஒருவேளை சம்மந்தப்பட்டவர்கள் மீது தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்கள் பாயலாம்.

தமிழர்களை வேலைக்கு வைத்தால் மேற்படி தொழிலாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது அப்படியொரு நெருக்கடியை, அரசியல் அழுத்தத்தை பல்வேறு தொழில்களில் கால் பதித்திருக்கும் முதலாளிகள் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் தங்களின் உழைப்புச் சுரண்டலுக்கு சிக்கல் ஏற்படலாம் என்பதால்தான் பெரும் தொகையில் வடஇந்திய தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களுக்காக இங்கு வந்து குவிகிறார்கள்.

இப்படி உடலுழைப்பைச் செலுத்துபவர்கள்தான் வடஇந்தியர்கள். இனால் இவர்களுக்கு வேலை வழங்கும் முதலாளிகள் தமிழர்கள் என்று நம்மில் பலபேர் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

பெரும் வணிக வளாகங்கள், துணிக்கடைகள், நகை மாளிகைகள், பன்னாட்டு உணவகங்கள் என அனைத்தும் வெளிநாட்டு, வெளி மாநிலத்தவர்களுக்கே இங்கு சொந்தமாக உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்திய பெருமுதலாளிகளில் முதல் 10 இடத்தைப் பிடித்திருப்ப வர்களின் சமீபத்திய கூடுதல் தொழில் ரியல் எஸ்டேட்டும் கட்டுமானத் தொழிலுமாகும்.

தமிழ்நாட்டில் இன்று ஓரு மேம்பாலம் கட்ட குறைந்தபட்சம் 200 கோடிக்கும் மேல் டெண்டர் விடப்படுகிறது. இதை கைப்பற்றுபவர்கள் பெரும்பாலும் மேற்படி முதலாளிகள்தான். இவர்களின் தொழில் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமானால் தொழிலாளர்கள் பாதுகாப்பு சட்டங்களின்படி வேலை வழங்க முடியாது. வேலைசெய்யும் ஓரு தமிழனை ஓரு வடஇந்திய முதலாளியோ அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள ஊழியனோ தாக்கி விட்டால் இங்கு பெரும் பிரச்சினை உருவாகும். நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம், வேலைக்கேற்ற ஊதியம், வேலை நேரத்தில் ஓய்வு என மூன்றும் சட்டப்படியான ஒரு தொழிலாளிக்கு உரிய உரிமைகளாகும். இதைத் தமிழர்களுக்கு வழங்க மறுத்தால் பிரச்சினை பெரிதாகும் என்பதாலேயே தமிழர்களுக்கு மேற்படி வேலைகள் மறுக்கப்படுகின்றன.

ஆக இங்கு முதலாளிகளும், தொழிலாளர்களும் தமிழர்கள் இல்லை. நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்கிறோம் என்பதை முத­ல் புரிந்துகொள்வது நல்லது.

இப்படியான வெளியாரின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கு நம்மிடம் ஒரே வழிதான் உள்ளது. அது தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, பெருநிறுவனங்கள் அனைத்திலும் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதாகும். இவர்களுக்கான தொழிற்பாதுகாப்புச் சட்டங்களை பின்பற்றவேண்டும் என்ற கோரிக்கையை மேலும் பரவலாக்க வேண்டும். மத்திய - மாநில அரசிடம் இதை முத­ல் கொண்டு செல்வதைவிட மக்கள் மன்றத்தில் பரப்புவதே நம் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.

அரபு நாடுகளிலும், ஆசியாவின் மிகப்பெரிய சேரியான மும்பை தாராவியிலும், கர்நாடகத்தின் பெங்களுரு, மைசூர் போன்ற நகரங்களிலும் தங்களின் சக்திக்கு மீறிய உழைப்பைச் செலுத்தி சொற்ப வருமானத்தில் மனிதப் புழுக்களாய் நெளியும் நம் தமிழர்களை விட வடஇந்தியர்கள் இங்கு அதிகமாய் உழைத்துவிடவில்லை. சொந்த மண்ணில் வாழ வழியின்றிதான் அந்நிய மண்ணில் பொருளாதார அகதிகளாக தமிழர்கள் வாழவேண்டிய அவலநிலை நீடிக்கிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான வேலையை உறுதி செய்யும் பட்சத்தில் வெளியார் வெளியேறுவார்கள். வந்தேறி முதலாளிகளும் தங்களின் மூட்டையைக் கட்டத் தொடங்குவார்கள். இது தாமதமானாலோ, தடைபட்டாலோ தமிழ்நாட்டில் வேறு விளைவுகள் ஏற்படும்.

பிழைப்புத் தேடி இங்கு வந்திருக்கும் அனைத்து மாநில தொழிலாளர்களுக்கும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை தடையின்றி வழங்கப்பட்டிருக்கிறது. வழங்கப்பட்டும் வருகின்றன. இவர்களின் வாக்கை கவர்வதற்காக கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் நேரங்களில் இவர்களின் தாய்மொழியில் சுவரொட்டி, துண்டறிக்கை அச்சடித்து வாக்கு சேகரிக்கும் கேவலம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மக்கள் பிரதிநிதியாக யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் வந்தேறிகள் இருக்கிறார்கள். இன்றைய வாக்காளர்கள் நாளை வேட்பாளர்களாகவும் மாறக்கூடும். பிறகு நம்மொழியில் சுவரொட்டியும், துண்டறிக்கையும் அச்சிட்டு நம் வாக்கை பெற முயற்சிக்கும் வேலையும் நடைபெறலாம். நம் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக வந்தேறிகள் இருப்பார்கள். நாம் அப்போதும் வாக்காளர்களாகத்தான் இருப்போம். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். காரணம், தமிழர்களின் தலையெழுத்தை தமிழர்கள்தான் எழுதவேண்டும்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.