தமிழகத் திருநாள் விழாச் செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014 16:51

நெல்லை

கடந்த நவம்பர் 1 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அம்சா அரங்கம், இராசேந்திர நகர், பாளையங்கோட்டையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கிய விழாவில் ஈ. தமிழீழன் வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்குரைஞர் பொ. இளஞ்செழியன் தலைமையில், ஆ. செல்லத்துரை, அ. பாலா, பா. மாரிகணேசன், ச. முத்துக்குமரன் முன்னிலை வகித்தனர். தமிழர் தேசிய முன்னணி மாநிலப் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் சிறப்புரையாற்றினார். அ. எல்லாளன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

தாய்த் தமிழகத்துடன் எல்லா பகுதிகளையும் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டங்களில் உயிர்நீத்த ஈகச் சீலர்களுக்கும் சொல்லொணாத கொடுமைகளுக்கு நடுவே உறுதியுடன் போராடிய தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இந்நாளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழகத் திருநாள் விழாவிற்கு வருகை தந்தோர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

சேலம்

சேலம் சாமுண்டி வணிக வளாகத்திலுள்ள இலட்சுமி அரங்கத்தில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழ் மாநிலம் அமைந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநிலத் துணைத் தலைவர் தணிக்கையாளர் மு. பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சி. முத்துசாமி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் இர. சிவப்பிரியன், வெ. தமிழமுதன், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ம. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி அமைப்பாளர் கா. தமிழ்வேங்கை "தமிழகம் இழந்ததும், இனி காப்பதும்'' எனும் தலைப்பில் உரையாற்றினார்.

தமிழக நாட்டுப்புறப் பாடகர் மாவட்டச் செயலாளர் அழ.க. அருநீரன் தமிழிசைப் பாடல்கள் பாடினார். உலகத் தமிழர் பண்பாட்டுக் கழக மாநிலத் தலைவர் கவிஞர் செ.சி. இளந்திரையன், க. அன்பழகன், தமிழக எல்லைப் போராட்ட தியாகிகள் சங்க மாநிலச் செயலாளர் மெ. ரத்தினம், மனம் மன்ற துணைச் செயலாளர் சுதந்திரராசு ஆகியோர் உரையாற்றினர். மாவட்டப் பொறுப்பாளர் "சேலத்துப் பாரதி' சொல்லரசர் தொகுப்புரையாற்றினார்.

க. பிந்துராசன், காமராசு, தமிழ்ச்செல்வன், எம்.ஏ. மாரியப்பன், சுந்தர்ராசன், கிருட்டிணகுமார், தமிழக எல்லைப்போராட்ட தியாகிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் மா. சுப்பிரமணியன், தமிழக எல்லைப்போராட்ட தியாகிகள் சங்க மாநிலப் பொருளாளர் கந்தசாமி உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். மாநிலத் துணைத் தலைவர் தணிக்கையாளர் மு. பாலசுப்பிரமணியம் எல்லைப் போராட்ட தியாகிகள் மெ. ரத்தினம், மா. சுப்பிரமணியம், கந்தசாமி ஆகியோருக்கு சால்வைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. இலங்கை அரசு பொய்க்குற்றம் சுமத்தி தமிழக மீனவர்கள் ஐந்து பேர்களுக்கு விதித்துள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி இலங்கை அரசை மத்திய அரசு வற்புறுத்தக் கேட்டும்.

2. இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பயிற்சி வழங்கக்கூடாது என்றும்.

3. குழந்தைகள் முதல் முதியோர் வரை முக்கிய உணவான பால் விலையேற்றத்தை தடுத்து பால் விலையைக் குறைக்கக்கோரியும்.

4. தமிழக அரசு ஆவின்பால் ஊழல் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்றும்.

5. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அரசு கொண்டுவரவேண்டும் என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர்க. சிறீதர் நன்றியுரை வழங்கினார்.

புதுக்கோட்டை

தலைவர் பழ. நெடுமாறன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழகப் பெருவிழாப் பொதுக்கூட்டம் நவம்பர் 1 சனிக்கிழமை அன்று புதுக்கோட்டை நகர் அரங்கில் நடந்தது விழாவுக்கு மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வை. வீறாண்டான், பொறியாளர் பாபு. ராஜேந்திரன், மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் தா. மணி ஆகியோர் பேசினர்.

தமிழ்த் தேசிய ஆய்வாளர், முனைவர் த. ஜெயராமன் தனது சிறப்புரையில் கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசுகளும் திராவிட இயக்கங்களும் நம் தாய் தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் செய்த கேடுகளையும், துரோகங்களையும் விளக்கியதுடன், தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், தலைவர்களும் ஒருங்கிணைந்து வலிமையான போராட்டங்களை நடத்தி இறையாண்மையுள்ள தமிழர் நாட்டை உருவாக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். முன்னதாக மாவட்டச் செயலர் இல. செழும்பரிதி வரவேற்றார். நிர்வாகி கா. அமுதன் நன்றி கூறினார். இதில், தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரை மாநகரில் 1-11-14 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பேச்சியம்மன் படித்துறையில் தமிழகப் பெருவிழாவும் தமிழர் தேசிய முன்னணியின் கொடியேற்றுவிழாவும், மாபெரும் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வெ.ந. கணேசன் தலைமையேற்க, துணைத் தலைவர்கள் அப்துல்லா, பு. திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் பு,ரே. துவாரகநாத் தொடக்கவுரையாற்றினார்.

தமிழர் தேசிய முன்னணி கொடியினை ஏற்றி வைத்து திரைப்பட தமிழ்த் தேசிய இயக்குநர் வ. கெளதமன் சிறப்புரையாற்றினர்.

மாநிலத் துணைத் தலைவர்கள் எம்.ஆர். மாணிக்கம், மரு. பொ.மு.செல்வம், செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கு. வேலன், ச. பிச்சைக் கணபதி, மருத்துவர்
திரு. கண்ணன், மாநகர செயலாளர்கள் கெ. ராமசுப்பு, திரு. சு. வாசுதேவன், மாநகர் பொருளாளர் சீ. வீராச்சாமி ஆகியோர் உரையாற்றினர். இளைஞர் அணி பொறுப்பாளர்கள் இரா. ராஜாசீனிவாசன், சூ.ப. தேசியமணி, வை.வேல்முருகன் மற்றும் மாநகர் செயற்குழு உறுப்பினர்களைச் சேர்ந்த அன்சாரி, க. பாலசுப்ரமணி, ச. தமிழ்மறவன், அ. கந்தவேல், சி.நாகராஜ், புலவர் வெ. நெடுஞ்சேரலாதன், ஆ. முத்துரஞ்சிதன், சு. தர்மர், த. ராஜகுரு, ம.ஐசு. ஹரிராம், வீ. கல்யாணசுந்தரம், சீ. கருணாநிதி, மு. முத்துவேல், மு. பாரதமுத்து, ஆ. ராஜா, சு. கல்யாணசுந்தரம், சா. கணேசன், வெ.ந.முருகன், பி.எம்.பிச்சை, எ.எம்.சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, வி.எம். பாண்டியன், சூ.ப. செல்வம், கோரிப்பாளயைம் பன்னீர், முத்துவீரன், சூ.ப. ஜெயபால், கி.சுந்தரபாண்டி, வை.கோபால், ரா.செடி, பஞ்சவர்ணம், தமிழன்பன், சின்னச்சாமி, குமரேசன் (பூக்கடை), திருப்பாவை, தேசியராமன், பா. ஸ்டீபன் பாபு, ஆரியங்காவு ஆகியோர் கலந்து கொண்டனர். மாநகர் செயலாளர் தி.முருகன் நன்றியுரையாற்றினார்.

 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.