தஞ்சையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 மே 2015 14:31

ஆந்திர வனப் பகுதியில் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர அரசைக் கண்டித்தும்,
தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறக்கோரியும் 09.04.2015 அன்று மாலை 6 மணிக்கு தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த 05.01.2015 அன்று, தமிழர் தேசிய முன்னணி தஞ்சையில், தமிழர் உற்பத்தி செய்யும் பொருட்களை தமிழர் கடைகளிலேயே வாங்குவோம் என்ற முழக்கத்தோடு நடத்திய தமிழர் தேசிய வாரத்தின் ஒரு பகுதியாக நடத்திய தெருமுனைக் கூட்டத்தில் வழங்கிய துண்டறிக்கையின் அடிப்படையில் அவர் மீது இ த ச 153- பிரிவின்படி வழக்குத் தொடுக்கப்பட்டது.

கருத்துரிமையையும், பேச்சுரிமையையும் பறிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் போடப்பட்டிருக்கும் இவ்வழக்கைத் திரும்பப்பெறக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் நிறைவுரையாற்றினார். பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில்அயனாபுரம் முருகேசன் மீது வழக்குத் தொடர்ந்த தமிழக அரசைக் கண்டித்தார்.

20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகள் மீது சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அமைத்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில், விசாரணை நடத்தவேண்டும். அந்த நீதிமன்றம் வேறுமாநிலத்தில் செயல்படவேண்டும். இதைக் கோரி, தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.