"புலி-விருது'ப் பழநிக்குமணன் வாழ்க! வளர்க! எழுத்தாளர் பழனி-மகிழ்நன் பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 14 மே 2015 17:48

தங்களுடைய தந்தையார் அய்யா தெய்வத்திரு. பழனியப்பனார் அவர்களுக்கு என்று ஒரு வரலாறு உள்ளது.

தங்களுக்கு (அய்யா. பழ.நெடுமாறன் அவர்களுக்கு) என்று தனித்த பெரும் வரலாறு உள்ளது.

தங்களின் பெருந்தவப் பெருமகனார் தமிழ்த்திரு பழநிக்குமணன் அவர்கள் புலிட்சர் விருது பெற்றதன் மூலம் தங்களின் பாரம்பரிய வரலாறு பண்பட்ட வரலாறாய் - பன்முக வரலாறாய் தொடர்கிறது.

புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதைத் தங்களுடைய மக்கட் செல்வங்கள் மெய்ப்பித்து வருகின்றனர். ஆம் தந்தை மக்களுக்காற்றியது சாலப் பெரிது என மகிழ்கிறேன்.

"புலிட்சர்' என்னும் விருதில்கூட புலி வந்திருக்கிறது. இயல்பான இதனைப் பார்க்கின்ற பொழுது இனி இவரைப் புலி விருதுப் பழநிக்குமணன் என்றே அழைக்கலாம், பாராட்டி மகிழலாம் என்று தோன்றுகிறது.

வாழ்வாங்கு வாழ்பவர்கள் படைக்கின்ற வரலாறு எவ்வாறு இருக்கும் என்பதற்குத் தாங்களும், தங்களுடைய மக்கள் செல்வங்களும் தகுதி வாய்ந்த சரியான சான்றாகவும், சீரிய சான்றாகவும் இருப்பது எண்ணி இன்புறத்தக்கது.

தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த சீரிய செந்தமிழர் தமிழ்த்திரு நெ. பழநிக்குமணன் அவர்களுக்கு மீண்டும் எனது மகிழ்வான வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க! வளர்க! வளமுடன் வாழ்கவே! நலமுடன் வளர்கவே! வேண்டும் நலம்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.