தமிழர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 12:12

திருப்பூர் சூன் 6: கொளத்தூர்மணி, முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்து அவர்கள் மேல்போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும், கருநாடக, தமிழகஅரசுகளை வற்புறுத்தியும் ஆர்ப்பாட்டம் மொழிப்போர் ஈகி ( தியாகி) ப. பெரியசாமி தலைமையில் 05-06-2002 அன்று மாலை 6.00 மணியளவில் திருப்பூர் குமரன் பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை வலியுறுத்தி மு. சக்திவேல், தென்மொழி ப. துரையரசன், ப. பழனியப்பன் ஆகியோர் பேசினர். க.ரா. முத்துச்சாமி, மணி மனோகரன், தம்பி ஈசுவரன்ஆகியோர் முன்னிலைவகித்தனர். தமிழர் தேசிய இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், இளந்தமிழர்பேரவை, தீலிபன் மன்றம், உலகத் தமிழ் முன்னேற்றக் கழகம், தமிழ் நேயப் பாசறை போன்ற அமைப்பினர் நூற்றுக்கு மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.