அருகமைப் பள்ளிகளே தேவை...! - முனைவர் வே. வசந்தி தேவி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 13:55

தமிழ்நாட்டில் 36,839 பள்ளி ஊர்திகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக அரசு அறிக்கை ஒன்று சொல்லுகிறது. இந்த ஊர்திகளுக்குச் செலவாகும் கன்னெய் போன்ற எரிபொருள் எவ்வளவு? வசதி படைத்த குழந்தைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஏற்றிச்செல்லும் மகிழுந்துகள் இதில் சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் சேமிக்கப்பட்டால் நாட்டின் இறக்குமதி எவ்வளவு குறையும்? அயல்நாட்டுச் செலாவணி எவ்வளவு மீதமாகும்? நாட்டின் பற்றாக்குறை பற்றி அங்கலாய்ப்போருக்கு, அடித்தட்டு மக்களுக்கு கொடுக்கும் சலுகைகளினால்தான் பற்றாக்குறை உருவாகிறது என்று சாடுபவருக்கு இந்த சேமிப்பு ஏன் தேவையானதாகத் தோன்றவில்லை? முகாமையாக பள்ளி ஊர்திகள் தேர்ச்சிக்கு உள்ளாவதிலும், சரியான பராமரிப்பு இன்மையாலும் ஆண்டு தோறும் உயிரிழக்கும் குழந்தைகள் எத்தனை பேர்?

இத்தகைய அவலங்களுக்கெல்லாம் மாற்றாக அருகமை பள்ளிகள் தேவை!

இந்தியக் கல்வி வரலாற்றில் அனைத்துக் கல்வியாளர்களாலும். கல்வி ஆணையங்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் மிகவும் புகழ்பெற்ற கோத்தாரி ஆணையத்தின் 1964ஆம் ஆண்டு அறிக்கை அருகமை பள்ளிகளின் பெரும் சிறப்பை நுட்பமாக விளக்குகிறது. "அவை வர்க்க - சாதி வேறுபாடு இன்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான கல்வியை அளிப்பது மட்டுமன்றி இப்பள்ளிகள்தாம் தரமான கல்வியை அளிக்க முடியும்'' என்றும் கோத்தாரி ஆணையம் கூறுகிறது.

(தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் - பக்கம் 9)

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.