மதுரையில் துண்டறிக்கை வழங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 06 அக்டோபர் 2015 13:10

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை அரசே விசாரணை நடத்தலாம் எனக் கூறும் அமெரிக்காவின் போக்கைக் கண்டித்து "நண்டுக்கு நீதிபதி நரியா?' என்ற தலைப்பில் பழ.நெடுமாறன் எழுதி தினமணி நாளிதழில் வெளியான கட்டுரையை துண்டறிக்கையாக அச்சடித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு அருகே மக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை மாநகர் தமிழர் தேசிய முன்னணியின் வெ.ந. கணேசன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் எம்.ஆர். மாணிக்கம் துண்டறிக்கையை மக்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கெ. இராமசுப்பு, தி. முருகன், மாநகர பொருளாளர் சீ. வீராசாமி, பி.எம். அன்சாரி, முத்துப்பாண்டி, ஹரிபிரசாத், சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.