இலங்கையில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்கள் 2009ஆம் ஆண்டு சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார்கள். இந்தப் படுகொலைக்கு இந்திய அரசு எல்லா வகையிலும் துணை நின்றது. அதற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. இலங்கையில் இந்த ஆண்டு 4,91,632 கார்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 90% கார்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும். மலேசியாவிலிருந்து 7%-ம், ஜப்பானிலிருந்து 1%-ம், மற்ற நாடுகளிலிருந்து 1%-ம் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய இந்திய அரசு உதவியதற்கு கைமாறாக இந்தியத் தொழிலதிபர்களுக்கு தனது நாட்டை சிங்கள அரசு திறந்துவிட்டுள்ளது |