மக்கள் துயர் துடைக்கும் தொண்டில் தமிழர் தேசிய முன்னணித் தோழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2015 15:25

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொறியாளர்கள் வழக்கறிஞர் மனோகரன், டி. சேவியர், எஸ்.ஆர். சங்கர், லோகநாதன், ஸ்டாலின், சையத் அலிப் ஆகியோர் சேகரித்த ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட உதவிப் பொருட்களை சென்னைக்கு கொண்டுவந்து தமிழர் தேசிய முன்னணி அலுவலகத்தில் சேர்த்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் தமிழ்வேந்தன் அவர்களின் துணையுடன் சென்று கந்தன்சாவடியில் இருந்த ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு அப்பொருட்களை தலைவர் பழ.நெடுமாறன் மூலம் வழங்கினர்.

பெரு மழை நம் தமிழ்நாட்டு உறவுகளை மட்டுமல்ல நம்மை நம்பி வந்த நமது தமிழீழ உறவுகளையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டது. நிலமை அறிந்து எம் ஈழ உறவுகள் வாழும் கும்மிடிப்பூண்டி முகாமிற்கு த.மணிவண்ணன், இயக்குநர் கெளதமன், ஜெயவேல், கதிரவன் ஆகியோர் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட ஆரஞ்சு,ஆப்பிள் பழங்களையும் பலநூறு தண்ணீர் போத்தல்களும் குழந்தைகளுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளும், ரொட்டிகளும், 29 தார்பாய்களும் ( வீட்டிற்கு மேல் கூரை போட ) ஒரு வேன் முழுக்க எடுத்துச்சென்று வழங்கினார்கள்.

சிவகங்கை மாவட்ட தமிழர்தேசிய முன்னணினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்களை நேரடியாகக் கொண்டு சென்று வழங்கினர். நிவாரணப் பொருட்கள் மாநில பொதுசெயலாளர் லெ.மாறன் அவர்கள் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது.மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அய்யா எழிலரசு, மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் தமிழ்மன்னன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபாகரன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆல்பர்ட்ராசா, காரைக்குடி நகரத்தலைவர் கோ.ஆறுமுகம், ஆகியோருடன் காரைக்குடி நகர தமிழர் தேசிய முன்னணியின் 15க்கும் மேற்பட்ட உறவுகள் நிவாரண பொருட்களை வழங்க சென்றனர். மேலும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வழிகாட்டியாக இருந்து செயல்பட்டனர் கடலூர் மாவட்ட தமிழர்தேசியமுன்னணியினர்.

20151206 131630

திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் வெள்ளம் பாதித்த பரங்கிப்பேட்டை அருகில் உள்ள அகரம் காலனி கிராமத்தில் 500 பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலமருதூர், கமால் நகர் ஆகிய பகுதிகளின் மக்களுக்கு உணவு, உடை,அன்றாட உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பணியில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மருத்துவர் பாரதிச்செல்வன், மாவட்டச் செயலர் திருவாரூர் கலைச்செல்வம், மாவட்டத் துணைத்தலைவர் தேவா, மன்னார்குடி நகரத் தலைவர் மகேஷ், மாவட்ட உழவரணித் தலைவர் கோவலன், மாவட்ட இளைஞரணி செயலர் இராசசேகரன், கோட்டூர் ஒன்றிய இளைஞர் அணி செயலர் கண்ணன், மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் விக்னேஷ், செந்தில், ராம் மற்றும் உள்ளூரைச் சேர்ந்த சகோதரர் சுல்தான் தலைமையில் இசுலாமிய இளைஞர்கள் பங்கேற்றனர்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.