தமிழ் மொழி கற்பீர்! - அண்ணல் காந்தி அறிவுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

http://thenseide.com/images/Gandhi.jpg(தென்ஆப்பிரிக்கா) போராட்டத்தில் தமிழ் மக்கள் பங்கெடுத்துக் கொண்டதைப்போல் வேறு எந்த இந்தியச் சமுகமும் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. எனவே, வேறு எந்தக் காரணத்துக்காக இல்லாவிட்டாலும அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதற்கேனும் அவர்களுடைய நூல்களை நான் கருத்தூன்றி வாசிக்க வேண்டும் என்று எண்ணினேன்.

ஆகவே அவர்களுடைய மொழியைக் கவனமாகக் கற்பதில் கடைசி மாதத்தைச் செலவிட்டேன். கற்கக்ஞி கற்க அதன் அழகுகளை மேன்மேலும் நான் உணரலானேன். அது சுவாரசியமும் இனிமையும் நிறைந்த ஒரு மொழி. நான் படித்த வரையில் தமிழர்களிடையே மதிநுட்பமும் அறிவுத்திறனும் விவேகமும் கொண்டவர்கள் பலர் முன்பு இருந்திருக்கிறார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள் என்பதைக் கண்டேன். இந்தியாவில் அனைவரும் ஓர் இன மக்களாக வாழ வேண்டுமென்றால் சென்னை மாகாணத்திற்கு வெளியே வாழ்கிறவர்கள் தமிழை அவசியம் கற்றாக வேண்டும் என்று கூறுகிறேன்.

(1922
ல் சென்னை தாகூர் அன் கோ வில் முதல் பதிப்பாக வெளிவந்த மகாத்மா காந்தியின் சிறைச்சாலை அனுபவங்கள் - அவரே கூறியவை )

 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.