நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00
மொழிப்போர் மறவர் அ. வியனரசு தொகுத்து எழுதிய தமிழ்செம்மொழி வரலாறு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திருநெல்வேலி செய்யது விடுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வள்ளியூர் இ. கவின் வேந்தன் தலைமை தாங்கினார். முதல் நூலை மூத்த தமிழறிஞர் ஆ. முத்துராமலிங்கம் வெளியிட, மருத நிலக்கட்டடத் தொழிற் சங்கத் தலைவர் நெல்லை க. அருள் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ம. தி. மு. க. சட்டத்துறை மாநிலச் செயலாளர் மு. சுப்புரத்தினம், இலக்கிய அணி மாநிலத்துணைத் செயலாளர் ம. சு. சுதர்சன், சங்க. தமிழ்ச்செல்வன், ஈ. தமிழன், தமிழறிஞர் கரையாளர், அ. தமிழ்மணி உள்பட திரளானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி நிறைவில் கருங்கல் கி. கண்ணன் நன்றி நவின்றார்.
 
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.