தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2004 00:00

மருத்துவர் இராமதாஸ், பழ. நெடுமாறன் ஆகியோரைக் காப்பாளர்களாகவும், தொல். திருமாவளவனைத் தலைவராகவும், மருத்தவர் ந. சேதுராமனை உயர்நிலைக்குழு உறுப்பினராகவும் கொண்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், பல்வேறு துறைகளிலும் தமிழை மீட்டெடுக்கவும், மேம்படுத்தவும் கீழ்க்காணும் செயல் திட்டங்கள் பலவற்றை அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் அனைவரும் அந்நிகழ்வுகளில் பங்கேற்று நிகழ்ச்சிகளை வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டுகிறோம்.


அக் 23: சென்னையில் இறுதி எச்சரிக்கைக் கூட்டம்

நவ 02: தமிழ்ப் பெயர்ப்பலகைகள் வைக்க வலியுறுத்தித் துண்டு வெளியீடுகள் வழங்கல்

நவ 08: தமிழ் அர்ச்சனையை வலியுறுத்திக் கோயில்கள் முன் ஆர்ப்பாட்டம்

நவ 15: தமிழ்முறைப்படித் திருமணம் நடத்த வலியுறுத்தல்

நவ 22: தமிழ் பயிற்றுமொழியாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நவ 29: தமிழ் நீதிமன்ற மொழியாக்கப்பட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டிச 07: தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

டிச 13: தொலைக்காட்சிகளில் தமிழ்க் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

டிச 20: தொலைக்காட்சித் தொடர்களில் தமிழ்ப்பண்பாட்டு, கலாச்சாரச் சீரழிவுக் காட்சிகளைத் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

டிச 27: ஆபாச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.