பிரான்சில் பரிதி படுகொலை - பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2012 17:58

Parithiஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளிக்கிழமை, 09 நவம்பர் 2012 18:09 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.