மாணவர்களைக் கைது செய்வதை நிறுத்துக! முதலமைச்சருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00

தமிழக மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று சல்லிக்கட்டு விளையாட்டிற்காக நடத்திய அறவழிப் போராட்டம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

 

மாணவர்களின் கோரிக்கையை மத்திய-மாநில அரசுகள் ஏற்றுச் சட்டமாக்கி உள்ளன.

இந்தச் சூழ்நிலையில் பல ஊர்களில் மாணவர்கள் கைது செய்யப்படுவதாக செய்திகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அமைதி திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில் இச்செயல் அதைக் கெடுப்பதாகும். மாணவர்களுக்கும் மற்றும் மக்களுக்கும் எதிரான அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்தவும், கைது செய்யப்பட்ட மாணவர்களையும் மற்றவர்களையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருமாறு தமிழக முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.