"அமெரிக்கத் தமிழர் முன்னோடி!' பழநிக் குமணனுக்குப் பாராட்டு! வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு அளித்தது PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:19

"அமெரிக்கத் தமிழர் முன்னோடி' என்ற பாராட்டை இதழியல் துறையில் மிகச்சிறந்த "புலிட்சர் விருது' பெற்ற நெ. பழநிக்குமணன் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மினி யா பொலிசு நகரில் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு மாநாடு  சூன் 22ஆம் நாள் நடைபெற்ற போது இப்பாராட்டு வழங்கப்பெற்றது.

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் திருமதி. செந்தாமரை-பிரபாகர், துணைத் தலைவர் திரு. சுந்தர் குப்புசாமி, செயலாளர் திருமதி.  இரமாமணி - செயபாலன், இணைச் செயலாளர் திரு. கால்டுவெல் வேள்நம்பி, பொருளாளர் திரு. தங்கமணி பால்சாமி ஆகியோரும் திரளான  அமெரிக்க வாழ் தமிழரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.