பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் |
|
|
|
வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2006 13:33 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தி : விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழருமான பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தொடக்கம் முதல் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு தன்னலமற்ற தொண்டு புரிந்தவர் அவர். விடுதலைப் புலிகளின் சார்பில் அனைத்து சமரசப் பேச்சுக்களிலும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்களுக்காக உறுதியாக வாதாடியவர். அவரின் மறைவின் மூலம் உருவான வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட காலத்திலும் கொஞ்சமும் கலங்காது இறுதி மூச்சு வரை கடமையாற்றியவர் அவர். அவருடைய மறைவினால் வருந்தும் அவருடைய துணைவியார் திருமதி. ஏடேல் அம்மையார் அவர்களுக்கும், தமிழீழ மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|