சுப. வீரபாண்டியனுக்கு 2 ஆண்டு கடுங்காவல். ஆகஸ்டு 20 வரை தண்டனை நிறுத்தி வைப்பு. PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 19:39

1995 சூலை 1 அன்று சென்னையில் நடைபெற்ற பாவலரேறு பெருஞ் சித்திரனார் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொழுது, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசி யதாக சுப.வீரபாண்டியன் மீது வழக்குத் தொடுக்கப் பட்டது.

அவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.3,000/- அபராதமும், பணம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை யும் விதித்து சென்னை, கைதை, 11-ஆவது நீதி மன்றத்தில் நீதிபதி ஆறுமுகம் 02-08-2002 அன்று தீர்ப்ப ளித்தார். எனினும் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பாக ஆகஸ்டு 20-ஆம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

இவ்வழக்கில் சில வித்தியாசமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவை. 1995 சூலையில் கூட்டம் நடை பெற்றது. ஆனால், 100 நாட்களுக்குப் பிறகு 1995 அக்டோபரில் தான் முதல் தகவல் அறிக்கை பதிவாகி யுள்ளது. அதற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழிந்த பின்பே சுப. வீக்கு நீதிமன்ற அழைப்பு ஆணை (சம்மன்) வழங்கப் பட்டது. ஏறத்தாழ 10 மாதங்கள் வழக்கு நடைபெற்று இப்போது தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

திங்கட்கிழமை, 07 மே 2012 19:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.