"தமிழ்த் தொண்டில் சிறந்து விளங்கியவர் பழநியப்பனார்'' என்று புகழாரம் சூட்டினார் தமிழறிஞர் தமிழண்ணல். |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2013 13:40 |
மதுரை வர்த்தக சங்க அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் தந்தை அறநெறியண்ணல் கி.பழநியப்பனார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழண்ணல் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
"அறநெறியண்ணல் பழநியப்பனார் 70 ஆண்டுகளுக்கு முன்னர்'', திருவள்ளுவர் கழகத்தை உருவாக்கி, வடக்காடி வீதியில் கட்டடம் அமைத்து, ஒவ்வொரு நாளும் அங்கு திருப்பணிக்கு ஏற்பாடு செய்தது அவரது வாழ்நாளின் மிகச் சிறந்த அறப்பணியாகும். தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்து அது மேலோங்கி வளர்வதற்கு அரும்பாடுபட்டவர் அவர்.
அவர் எந்தக் காரியத்தையும் திட்டமிட்டு செய்பவர். "ஆகாஷவாணி' என வானொ நிலையத்துக்கு மத்திய அரசு பெயர் வைத்தபோது, அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், "அகில இந்திய வானொ நிலையம்' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வயுறுத்தினார்.
இந்த பெயர் மாற்றம் நிகழும் வரை வானொயில் பேச மறுத்தார் பழநியப்பனார். இதற்கு கி.ஆ.பெ. விசுவநாதனும் ஆதரவு கொடுத்தார். தமிழ் மொழிப்பற்றுடன், சிவநெறித் தொண்டிலும் சிறந்து விளங்கினார். பொதுவாக, சிவநெறியாளர்கள் சீர்திருத்தவாதிகளாக இருப்பதில்லை. சீர்திருத்தவாதிகளாக இருப்பவர்கள் சிவநெறித் தொண்டு செய்வதில்லை. ஆனால், பழநியப்பனார் இரண்டிலும் கருத்தாய் இருந்தவர். சாதி மறுப்புத் திருமணத்தை ஆதரித்தவர். தனது மகனுக்கே சாதி மறுப்புத் திருமணம் செய்து முன்னோடியாகத் திகழ்ந்தவர். கோயில்களில் வழிபாடுகள் தமிழ்மொழியில் நடைபெற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். அதை சாதித்தும் காட்டியவர். இதுபோன்ற நல்வழிகாட்டும் தலைவர்கள் இன்றைக்கு இல்லை. தமிழில் நாள்காட்டியை முதல் வெளியிட்ட பெருமை பழநியப்பனாருக்கு உண்டு. நாள்காட்டி, திரு உள்ளிட்ட பல தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்தவர் அவர். இவரது தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில் பழநியப்பனாருக்கு "அறநெறியண்ணல்' என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தார் குன்றக்குடி அடிகளார் என்றார் அவர். இந் நிகழ்ச்சியில், "பழநியப்பனாரின் திருக்குறள் தொண்டு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு முனைவர் ச.வே.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முனைவர் சாம்பசிவனார், முனைவர் தாயம்மாள் அறவாணன், உலகத் திருக்குறள் பேரவை தலைவர் ந. மணிமொழியன், முனைவர் வி.தமிழரசு, முனைவர் இரா.மலர்விழி மங்கையர்க்கரசி, பேராசிரியர் ராசா கோவிந்தசாமி, புலவர் சுப.ராமச்சந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
|
வெள்ளிக்கிழமை, 09 ஆகஸ்ட் 2013 13:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |