முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழா அக்டோபர் 12, 13 ஆகிய நாட்களில் நடைபெறும் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:23 |
04-07-13 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையேற்க உறுப்பினர்கள் சா. சந்திரேசன், காசி ஆனந்தன், வ. தீனதயாளன், கோ. இளவழகன் ஆகியோர் கலந்து கொண்ட உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள் 1. உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர் தி. அழகிரிசாமி அவர்கள் மறைவு உலகத் தமிழர் பேரமைப்புக்கு பேரிழப்பாகும். இந்த அமைப்பை உருவாக்குவதிலிருந்து இன்றுவரை அதனுடைய வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட அவரின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. 2. தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழாவினை வருகிற 2013ஆம் ஆண்டு அக்டோபர் 12, 13 ஆகிய தேதிகளில் நடத்துவது என இக்கூட்டம் முடிவு செய்கிறது. திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தமிழறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆகியோரை அழைப்பது எனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது. 3. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் அறங்காவலர்கள் குழுவில் திரு. கா. பரந்தாமன், திரு. ம. பொன்னிறைவன், திரு. பெ. மணியரசன் ஆகிய மூவரையும் நியமிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது. 4. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சிறப்பு அதிகாரியாக திரு. ஜான் கென்னடியை நியமிப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது.
|
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2013 15:24 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |