ஆயுதங்களைக் குவிக்கிறது சிங்கள அரசு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஆகஸ்ட் 2002 16:01
கொழும்பு, சூன் 16: சிங்கள இராணுவத்தினருக்குச் சிறப்பு இராணுவப் பயிற்சிகளை இந்தியா வழங்க உள்ளதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய இராணுவத்தின் அதிரடிப் பயிற்சி மையங்களில் சிங்கள இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான உடன்பாடு இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ளதாக இச்செய்தி கூறுகிறது. ஏற்கனவே, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சிங்கள அரசு இத்தகைய பயிற்சிக்கான உடன்பாடுகளை செய்திருக் கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க இருக்கும் கட்டத்தில் சிங்கள அரசு செய்து வரும் இத்தகைய உடன்பாடுகளும் இராணுவத்தை மேலும் பலப் படுத்தச் செய்யும் முயற்சியும் உடன்பாட்டின் அடிப்படையை யே தகர்த்து விடும் எனப் பல பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிங்கள அமைச்சர்கள் உலகின் பல்வேறு நாடு களுக்குச் சென்று இராணுவத் தளவாடங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிங்களப் பாதுகாப்பு அமைச்ச ரான திலக் மாரப்பனா கடற் படை தளபதி சந்தகிரி, இராணு வத்துறையின் ஆலோசகர் பிரிகேடியர் முனசிங்கே ஆகியோருடன் சீனா சென்று விரைந்து தாக்கும் பீரங்கிப் படகுகள் மற்றும் கனரக இராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதற்குப் பதிலாக இலங்கையின் வட கிழக்குக் கடலில் எந்தத் தங்கு தடையும் இல்லாமல் மீன் பிடிப்பதற்கு சீன மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாரப்பனா தெரிவித் திருக்கிறார். சீனாவின் பாதுகாப்பு அமைச்சரான ஷீ ஹயோடியன் என்பவர் பலவீன மடைந்துள்ள சிங்கள இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்து வதற்கு சீனா உதவி செய்யும் - சிங்கள கடற்படைக்கு போர்க் கப்பல்களையும் சீனா வழங்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பிரதமர் இரணில் விக்கிரம சிங்கே இந்தியாவுக்கு கடந்த வாரம் வந்திருந்த போது திரிகோண மலையிலுள்ள எண்ணெய்க் குதங்களைக் குத்தகைக்கு கொடுக்கவும் அதற்குப் பதிலாக சிங்கள இராணுவத்திற்கு அதிரடிப் பயிற்சி தரவுமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

அமெரிக்கத் தலைநகரமான வாஷிங்டனுக்குச் சென்று இலங்கை வெளிநாட்டு அமைச்சர் பெர்னாண்டோ அமெரிக்க வெளிநாட்டு அமைச்சரான பவலுடன் ஒரு உடன்படிக்கையில் கையெழுத் திட்டுள்ளார். சிங்கள இராணு வத்திற்குத் தேவையான இராணுவத் தளவாடங்களை யும் பயிற்சிகளையும் அமெரிக்கா அளிப்பதற்கு இந்த உடன்பாடு வழி செய்திருக் கிறது. போர் நிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தைப் பலப்படுத் தும் வேலையிலும் ஆயுதங் களைக் குவிக்கும் வேலை யிலும் சிங்கள அரசு ஈடுபட்டு இருக்கிறது. அதே வேளையில் விடுதலைப் புலிகளுக்கு வெளியேயிருந்து எந்த ஆயுத உதவியும் வராமல் தடுப்பதற்கு அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியைச் சிங்கள அரசு நாடியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 16:02 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.