தமிழர் தேசிய முன்னணி : பின்வரும் ஒழுங்குமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 ஆகஸ்ட் 2014 15:54

1. சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளும் தலைவருக்கும் இதர நிருவாகி களுக்கும், மாலை, துண்டு, சால்வை போன்றவற்றை அணிவிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
2. அதற்குப் பதில் நிதியாக அளித்து முன்னணியின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
3. வாணவேடிக்கை, மேள-தாளம் மற்றும் ஆடம்பரமான வரவேற்பு ஏற்பாடுகள் அறவே கூடாது.
4. அமைப்புக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய தோழர்கள் குடும்பம், குடும்ப மாகக் கலந்துகொள்ள வேண்டும்.
5. மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்கும் வகையில் பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டும்.
6. அமைப்புக் கூட்டம் ஏதாவது ஒரு மண்டபத்தில் கூட்டப்பட வேண்டும்.
7. கூட்டம் குறித்த விளம்பரச் சுவரொட்டிகள், பதாகைகள் போன்றவற்றில் நமது கொடி முக்கிய இடம் பெற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது மக்களி டையே கொடி நன்கு அறிமுகமாகும்.
8. தொடர்ந்து சுற்றுப்பயணம் இருப்பதால் வேறு எந்த புதிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாம்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.