தமிழீழ இனப்படுகொலை தொடர்பான ஆவணங்களை அனுப்பி உதவுவோம் வாருங்கள்! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 11:54 |
தமிழீழத்தின் மீது சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், இன அழிப்பு உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் தொடங்கியுள்ளது. இவ் விசாரணைக்கு உதவும் வகையில் நாமும் புகார்களை அனுப்பி வைக்கலாம்.
- குற்றச்செயல் நடந்த காலம் 21-02-2002 முதல் 15-11-2011 வரை. இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி, அதற்குப் பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம். - புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30-10-2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும். - புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம். - புகார்கள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். - காணொளிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது. "சர்வதேச இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையம்' என்ற அமைப்பு இவற்றை சரியான முறையில் செய்தனுப்ப உதவி செய்கின்றது. ஆவணங்களை அனுப்ப வேண்டிய முகவரி : சர்வதேச இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையம்:
227, Basement Office, Preston Road, Wembley HA9 8NF UK. Britan : +44(0)7869133073 / +44(0) 6766294123 Australia : 0061 4327 62377, Canada : 001 416 854 4143 France : 0033 623 667177, Germany : 0049 176 7042 4439 North America : 001 614 799 2628, Swiss : 0041 7826 1764 E-mail :
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
/ cppg.org facebook : fb.com/centerfor.ppgenocide Skype : icppgec, website : www.icppg.org
|
செவ்வாய்க்கிழமை, 09 செப்டம்பர் 2014 12:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |