சிவசிதம்பரம் மறைவுக்கு விடுதலைப்புலிகள் அஞ்சலி! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2002 16:25
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்துறைதமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு. முருகேச சிவசிதம்பரம் அவர்களின் மறைவு குறித்து இரங்கற் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த இரங்கற் செய்தி வருமாறு:

மக்களை நேசித்த ஒரு பண்பான மனிதர் இன்று மீளாத்துயில் கொள்கிறார். இந்த இலட்சிய மனிதரை இழந்து எமது தேசம் இன்று ஆறாத்துயரில்மூழ்கிக் கிடக்கிறது. தமிழ்த் தேசத்தினது விடுதலைக்காகவும், தமிழ் மக்களதுநலனை முன்னெடுக்கின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கத்திற்காகவும் தனது இறுதிக் காலம் வரை ஓய்வின்றி உழைத்த பெருமனிதர் இவர். இவரது இழப்பு தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் துயரக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. விவரிக்கமுடியாத துன்பங்களும்வியத்தகு தியாகங்களும் நிறைந்ததும் மனித குலத்தின் விடுதலை எழுச்சிக்கு ஓர் உன்னத எடுத்துக் காட்டாகபரிணமித்து உள்ளதுமான எமது தேசிய விடுதலைப் போராட்டத்தையும் இதனை உறுதியோடு முன்னெடுத்து வருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைத் துவத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. தமிழீழ தேசியத் தலைவரது வழிநடத்தலின்கீழ் எல்லோரும் ஒன்றுதிரண்டு போராடினால்தான் தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை வென்றெடுக்க முடியும் என்ற பேருண்மையையும், பெருயதார்த்தையும் உணர்ந்துகொண்டு அதனையே நெஞ்சில் நிறுத்தி இவர் உறுதியோடு செயலாற்றினார். தமிழீழத்தாய் பெற்ற மண்ணின் மைந்தன் என்ற தேசாபிமானப் பற்றுணர்வுடன் இவர் தமிழ் மக்களதுநலனை முன்னெடுப்பதற்காக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் ஒற்றுமைக்கு உந்துசக்தியாக நின்றார். வயது முதிர்ந்து, உடல் தளர்ந்தபோதும் உறுதி தளராது தன்னாட்சி உரிமைக்கான எமது உரிமைப் போராட்டத்திற்கு இவர் உரக்கக் குரல் கொடுத்தார். உலக மட்டத்தில் எமக்காக நியாயம் கேட்டார். இவற்றுக்கான ஆழமான தேசப்பற்றுடனும் அசாதாரண துணிச்சலுடனும் அயராது உழைத்தார். தர்மத்தின் குரலாக நின்று இவர் எமது மக்களுக்கு எதிராக் கட்டவிழ்த்து விடப்பட்டஅதர்மத்தை எதித்த்தார். அநீதிக்கு சவால் விடுத்தார். எமது தேசிய தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிராகவும் புனையப்பட்டுள்ள பொய்யான கருத்துரைகளையும் புளுகுரைகளையும் கலைக்க சிறீலங்காப்பாராளு மன்றத்திலும் வெளியுலகிலும் இவர் ஓயாது குரல் கொடுத்தார். விடுதலை உணர்வு மனிதர்களின் மனதில் ஆழமாக வேரோடி நிற்பது,மனிதர்களை ஆட்கொண்டு நிற்பது, இந்த அபூர்வ சக்தி திரு. முருகேச சிவசிதம்பரம் அய்யாவினது நெஞ்சிலும்தணியாத நெருப்பாக அவரது வாழ்வின் இறுதிவரைஈன்று கொண்டிருந்தது.இந்த விடுதலை உணர்வினால் உந்தப் பெற்ற இவர் தனது அறிவாற்றலாலும் செயல் ஆற்றலாலும் தமிழ் மக்கள் தமது இலட்சியத்தை வென்றெடுக்க அயராது உழைத்தார். இவர் மிகவும் படித்த பண்பான மனிதர் இவர் மிகுந்த பணிவடக்கம் மிக்கவர். இவரது கனிந்த முகமும் அகன்ற நெற்றியும் அவரதுஅறிவையும் ஆற்றலையும் குறியீடு செய்தன. இவரது இரக்க சிந்தனையும், மனித நேயமும் அனைவரையும் கவர்ந்தன. இத்தகைய அருங் குணங்களை வரித்துக் கொண்டு இவர் தமிழ் மக்களது நலன்களை தனது வாழ்வின் இறுதி வரை முன்னெடுத்தார்.மிகுந்த நிதானத்துடனும்,மிகுந்த விழிப்புடனும் செயலாற்ற வேண்டிய மிகவும் தீர்க்கமான இன்றைய காலகட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது தலைமைத்துவத்தின் கீழ் அனைவரும் ஒன்றுதிரண்டு நிற்கவேண்டும் என்ற நிதர்சன உண்மையைப் புரிந்து கொண்டு அதற்காகவே நின்ற திரு. முருகேச சிவசிதம்பரம் அய்யா அவர்களதுவழியில் எல்லோரையும் உறுதிபூண்டு நிற்குமாறு வேண்டுகிறோம். அத்தோடுஇவரது இழப்பினால் துயருற்று நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், அன்னாரது குடும்பத்தினதும் வருத்தத்தில் நாமும் பங்கு கொள்கின்றோம்.

'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'.

பழ. நெடுமாறன் இரங்கற் செய்தி!

சென்னை, சூன் 6: தமிழர்விடுதலைக் கூட்டணியின்மூத்த தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசிதம்பரம் காலமான செய்தி உலகெங்கும் உள்ள தமிழ்மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கையில் சமரசப் பேச்சு தொடங்கியுள்ள இந்த வேளையில் அவர் மறைந்திருப்பது பேரிழப்பாகும். "விடுதலைப் புலிகளே ஈழத் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள்'” என்ற கருத்தை தனது மரண சாசனமாகஅவர் வெளியிட்டிருந்தார். அவரின் மறைவினால் வருந்தும் குடும்பத்தினருக்கும்ஈழத் தமிழருக்கும்ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 16:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.