தமிழகத் திருநாள் நடத்தத் தடை பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 19 நவம்பர் 2014 11:58 |
1956ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழ் மாநிலம் உருவானதை தமிழக அரசே கொண்டாடியிருக்க வேண்டும். பிற மாநிலங்களில் இந்த விழாக்களை அந்தந்த அரசுகளே கொண்டாடுகின்றன. அரசு கொண்டாடாத நிலையில் தமிழகத் திருநாளை கொண்டாட தமிழர் தேசிய முன்னணி முடிவு செய்தது. அதற்கிணங்க தமிழகம் முழுவதிலும் இவ்விழா அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற்றிருக்கிறது.
ஆனால், விழுப்புரம், ஆவடி, சென்னை பாரதி நகர் ஆகிய இடங்களில் இவ்விழாக்களை நடத்துவதற்குக் கடைசி நேரத்தில் காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். காவல் துறையின் ஜனநாயக விரோதப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயர்நீதி மன்றம் இதுபோன்ற தடைகள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற சனநாயக உரிமைகளுக்கு எதிரானது என பல தீர்ப்புகளை வழங்கியிருந்தும் காவல்துறை மீண்டும் மீண்டும் இதே தவறை செய்வது நீதிமன்றத்தை மதிக்காதப் போக்காகும். இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் அந்த இடங்களில் தமிழகத் திருநாளை நடத்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.
|
புதன்கிழமை, 19 நவம்பர் 2014 11:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |