மாணவர்களுக்கு எதிராக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம் பழ.நெடுமாறன் கண்டன அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015 12:00

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் அமைதியாக நடத்திய போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய தடியடியின் விளைவாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் விளைவாக தமிழகம் எங்கும் மாணவர்கள் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன. உடனடியாக முதலமைச்சர் மாணவர்களை அழைத்துப் பேசி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். இல்லையேல் மாணவர்களின் போராட்டம் தீவிரமடையும் என்பதை எடுத்துக்காட்டி எச்சரிக்க விரும்புகிறேன்.

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.