தமிழ் ஒருங்குறியை சீரழிக்கும் முயற்சி - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015 12:45

கணினி உலகில் ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாகத் தமிழ் முக்கிய இடம் பெற்றுள்ளது. தமிழ் ஒருங்குறியை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தமிழர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழுடன் சிறிதளவுகூட தொடர்பில்லாத சிலர் தமிழ் ஒருங்குறியை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை சேர்க்கும் முயற்சி தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தமிழறிஞர்கள் போராடி தடுத்து நிறுத்தினர். இப்போது தமிழ்நாட்டின் தொன்மையான பின்னங்கள், வாணிபக் குறியீடுகள், அளவைகளின் குறியீடுகள் போன்ற 55 வகையான குறியீடுகளை பிழையான வகையில் தமிழ் ஒருங்குறியில் சேர்க்க முயன்று வருகின்றனர். தொல்லியல், நாணயவியல் மற்றும் வரலாற்றுத் துறையைச் சேர்ந்த அறிஞர்கள் இந்தப் பரிந்துரையை வழங்கியிருந்தால் அதை ஏற்பதில் எந்தத் தடையும் இல்லை. மாறாக மேற்கண்ட துறைகளுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருவர் இவ்வாறு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதை தமிழறிஞர்கள் செய்ய முன்வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.